Posts

83/830:திருக்குறள்-கூடா நட்பு

Image
பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு அகநட்பு ஒரீஇ விடல். பகைவரிடம் நட்பு செய்யும் காலம் ஏற்பட்டால் முகத்தால் நட்பு செய்து உள்ளத்தால் வெறுத்து பின் புற நட்பையும் விடல் வேண்டும்,எதிரிகளிடம் பழகவேண்டிய நேரம் வந்தால் முகத்தால் முகத்துதி செய்து முகத்துக்காக பழக்கிகொண்டு மனதால் வெறுத்தொதுக்கவேண்டும் அப்படியே நட்புறவையும் குறைத்துக்கொள்ளவேண்டுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

83/829:திருக்குறள்-கூடா நட்பு

Image
மிகச்செய்து தம்எள்ளு வாரை நகைச்செய்து நட்பினுள் சாப்புல்லற் பாற்று. வெளியே மகிழ்ந்து உள்ளத்தால் இகழும் பகைவரிடம் நாமும் அவர் போன்றே நடத்தல் வேண்டும்.நட்பில் மகிழ்ச்சியாக இருப்பது போல நடித்துக்கொண்டு இதயத்தால் தூற்றி திரியும் நண்பர்களிடம் அவர்கள் செய்வது போலவே நாமும் செய்து நட்பிலிருந்து விலகிவிடவேண்டுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

83/828:திருக்குறள்-கூடா நட்பு

Image
தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார் அழுதகண்ணீரும் அனைத்து.பகைவரின் குப்பிட்ட கையுள் தீய படை ஒடுங்கியிருக்கும் அவர்களின் கண்ணீரும் அத்தகையதே.எதிரிகளின் குப்பிடுகின்ற கைகளுக்குள்ளேயே தீய படைகளும் எண்ணங்களும் ஒழிந்திருக்கும் அதேபோலதான் அவர்களினல கண்ணீருமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

83/827:திருக்குறள்-கூடா நட்பு

Image
சொல்வணக்கம் ஒன்னார் கண் கொள்ளற்க வில்வணக்கம் தீங்கு குறித்தமை யான்.வில்லானது வணங்கிருப்பது அம்பினால் கெடுதி விளைவிக்கவே அதுபோன்றே பகைவரின் சொல் வணக்கமும்.வில்லின் பணிவு என்பது அம்பினால் துயரத்தை ஏற்ப்படுத்தவே அதேபோலதான் எதிரிகளின் சொல்பிரயோகமும் உடல் அசைவுகளுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

83/826:திருக்குறள்-கூடா நட்பு

Image
நட்டார் போல் நல்லவை சொல்லினும் ஒட்டார் சொல் ஒல்லை உணரப்படும். நண்பர் போல் நல்லதைச் சொன்னாலும் பகைவர் சொற்கள் வேறென்பதை விரைவாக அறியலாம்.நட்புறவில் உள்ளவர்கள் இனிமையாக நல்லவர்கள் போல் பேசினாலும் அவர்கள் பேசும் பேச்சில் இருந்து அவர்களின் தீய குணங்களை புரிந்து கொள்ளமுடியுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

83/825:திருக்குறள்-கூடா நட்பு

Image
மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும் சொல்லினால் தேறற்பாற்று அன்று. மனதில் நட்பு கொள்ளாதவரை அவர் சொல்லை வைத்து எள்ளளவும் நம்புவதற்கு இடமில்லை.மனதால் நட்புறவு கொள்ளாமல் பேசுவதொன்றும் செய்வதொன்றுமாக இருக்கும் நட்புறவாளார்களை வாழ்வினில் என்றென்றும் கொஞ்சம் கூட நம்பாமலிருக்கவேண்டுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

83/824:திருக்குறள்-கூடா நட்பு

Image
முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா வஞ்சரை அஞ்சப்படும்.பார்வைக்கு நல்லவராய் சிரித்தும் உள்ளத்தில் கெடுதியுமுடைய வஞ்சகர்க்கு அஞ்ச வேண்டும்.சிறப்பாக சிரித்து பேசி உள்ளத்தால் கேடு நினைப்பவர்களை நட்புறவு கொள்ளதாது விட்டு விலகிவிடவேண்டுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.