Posts

91/910:திருக்குறள்-பெண்வழிச் சேறல்

எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடைய்யார்க்கு எஞ்ஞான்றும் பெண்சேர்ந்தாம் பேதைமை இல்.சிந்தனை நிறைந்த மனத்திடம் உடையவர்க்கு மனைவி சொற்படி நடக்கும் மடமை இராது.சிந்திக்கும் திறமையும் உள்ளத்திறனுடைய ஆண்களுக்கு மனையாள் சொல்படி வாழும் வாழ்க்கையிருக்காதென எடுத்துரைக்கின்றது திருக்குறள். தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

91/909:திருக்குறள்-பெண்வழிச் சேறல்

நாட்டார் குறைமுடியார் நன்னுதலான் பெட்டாங்கு ஒழுகுபவர்.அழகிய நெற்றியுடைய மனைவி சொற்படி நடப்பவன் நண்பர்க்கு உதவான் நன்மையும் செய்யான்.முகஅழகான மனையாளின் சொற்களின் கீழ் வாழ்வினில் வாழுகின்றவர்கள் உற்றார் உறவினர் நண்பர்களுக்கு என்றென்றும் உதவவும் மாட்டார்கள் சமுகத்திக்கு சிறந்த நன்மைகளையும் செய்யமாட்டார்களென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம் . மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம்.மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

91/908:பெண்வழிச் சேறல் திருக்குறள்

நாட்டார் குறைமுடியார் நன்னுதலான் பெட்டாங்கு ஒழுகுபவர்.அழகிய நெற்றியுடைய மனைவி சொற்படி நடப்பவன் நண்பர்க்கு உதவான் நன்மையும் செய்யான்.முகஅழகான மனையாளின் சொற்களின் கீழ் வாழ்வினில் வாழுகின்றவர்கள் உற்றார் உறவினர் நண்பர்களுக்கு என்றென்றும் உதவவும் மாட்டார்கள் சமுகத்திக்கு சிறந்த நன்மைகளையும் செய்யமாட்டார்களென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம் . மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம்.மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

91/907:பெண்வழிச் சேறல் திருக்குறள்

பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப் பெண்ணே பெருமை உடைத்து.மனைவியின் கட்டளைப்படி நடக்கும் ஆடவனைவிட நாணமுடைய பெண்மையே மதிக்கதக்கது . மனையாளின் சொற்படி வாழுகின்ற கணவனை விட நாணமுடைய பெண்மையின் புகழ் மதிக்கதக்கதென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம் . மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம்.மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

91/906:திருக்குறள்-பெண்வழிச் சேறல்

Image
இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள் அமையார்தோள் அஞ்சு பவர். மனைவின் அழகிய தோள்கண்டு மயங்கி அஞ்சுபவன் விண்ணவர் போல வாழ்ந்தாலும் சிறப்பில்லை. மனையாளின் அறிவில்லா தன்மையை தெரிந்திருந்தும் அழகில் மயங்கி அடிமையாக வாழ்ந்து கொண்டிருக்கும் கணவர்களுக்கு எவ்வளவு சிறப்பாக வாழ்ந்தாலும் வாழும் வாழ்வில் எப்பயனுமில்லையென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

91/905:திருக்குறள்-பெண்வழிச் சேறல்

Image
இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற்றெஞ்ஞான்றும் நல்லார்க்கு நல்ல செயல்.மனைவிக்கு அஞ்சுபவன் நல்லவர்க்கு நன்மை செய்ய என்றும் அஞ்சுவான்.மனையாளுக்கு பயப்பிடுகின்ற கணவன் சிறந்தவர்களுக்கு என்றுமே நன்மைகள் எதையும் வாழ்வினில் புரியமாட்டானென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம் . மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம்.மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

91/904:திருக்குறள்-பெண்வழிச் சேறல்

Image
மனையாளை அஞ்சும் மறுமையி லாளன் வினையாண்மை வீறெய்தல் இன்று.மனைவிக்கு அஞ்சி நடப்பவன் மறுமை இழந்தவன் அவன் காரியதிறன் பெரும் சிறப்படையாது.மனையாளின் சொல்லுக்கு அடிபணிந்து வாழுகின்ற ஆடவனுக்கு வாழ்க்கை உயராது அவனின் செயல் திறன்களும் பெருமளவில் விரிவடையாதென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம்.மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.