Posts

94/940:திருக்குறள்-சூது

இழத்தொறுஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம் உழத்தொறூஉம் காதற்று உயிர். பொருளை இழக்குந்தோறும் சூதில் ஆசைவளரும் துன்பங்கள் படப்பட வாழ்வில் பற்றும் வளரும்.சூதாட்டத்தில் செல்வங்களை இழக்கும் போது கவலை தோன்றும் அதே வேளையில் இழந்ததை பெற்று விடலாமென்று ஆசையும் அதிகரிக்கும் துன்ப துயரங்களை வாழ்வினில் அனுபவித்தால்தான் வாழ்க்கையில் பற்றுதல் ஏற்ப்படுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

94/939:திருக்குறள்-சூது

உடை செல்வம் ஊண்ஒளி கல்வி என்றும் அடையாவாம் ஆயம் கொளின்.சூதாட்டத்தை மேற்கொண்டால் உணவு உடை செல்வம் மதிப்பு கல்வி என்ற ஐந்தும் ஒருவனை வந்தடையா.மனிதர்களின் வாழ்வியலில் சூதாட்டம் என்பது மேன்மை தராது அதனால் வரும் உழைப்போ அல்லது வருமானமோ என்றும் வாழ்வில் நன்மை தராது கல்வியும் செல்வமும் கெளரவமான வாழ்கையும் உடையும் உணவும் மனிதர்களின் வாழ்வில் என்றும் வந்து சேராதென எடுத்துரைக்கின்றது திருக்குறள். தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

94/938:திருக்குறள்-சூது

பொருள் கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து அல்லல் உழைப்பிக்கும் சூது. சூது ஒருவன் பொருளழித்து பொய்யனாக்கி அருள் குணம் கெடுத்து அழ்ந்த துன்பம் தரும். சூது என்பது மனிதர்களின் செல்வங்களை பறிந்து சொத்துக்களை அழித்து கடன்காரர்களாக்கி கையில் காசு இல்லாமல் செய்து கடன்வாங்கி சூதாடி வாங்கிய கடனை திருப்பிக்கொடுக்கமுடியாது சமுதாயத்தின் மத்தில் பொய்உரைக்க வைக்குமென எடுத்துரைக்கின்றது திருக்குறள். தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

94/937:திருக்குறள்-சூது

பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் கழகத்துக் காலை புகின்.சூதாடும் கழகத்திற்கு நாளும் செல்வாராயின் அவரது பழைய செல்வமும் நற்குணமும் அழியும்.சூதாடும் இடத்திற்கு தினமும் செல்பவர்களின் வாழ்க்கையில் பரம்பரையாக வந்த செல்வமும் தாங்களே உழைத்த சொத்துகளும் அவர்களிடமிருந்த சிறந்த நல்ல குணங்களும் சமுதாயத்தில் அழிந்து போவதை காலத்தால் உணரமுடியுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள். தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

94/936:திருக்குறள்-சூது

அகடாரார் அல்லல் உழைப்பர்சூ தென்னும் முகடியால் மூடப்பட்டார்.சூது என்னும் மூதேவியால் கவரப்பட்டவர் வயிறு நிறைய உண்ணாது துன்பத்தில் வருந்துர். சூதாட்டம் என்னும் சனியன் பிடித்த வலையில் வீழ்ந்தவர்கள் வாழ்க்கையில் நின்மதியிழந்து வயிறு நிறைய உணவு உண்ணாமல் வறுமையில் வாடி துன்பத்தை அனுபவித்து வாழ்வை வாழநேரிடுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள். தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

94/935:திருக்குறள்-சூது

கவறும் கழகமும் கையும் தருக்கி இவறியார் இல்லாகி யார்.சூதாடும் காயும் இடமும் கைத்திறமும் கொண்டு விடாது சூதினை பற்றியவர் ஏழ்மையடைவர்.சூதாட்டத்தில் நாட்டாம் தினமும் அந்த இடத்துக்கே போவது சூதாட்டாத்தில் ஈடுபடுவதையே பழக்கமாக கொண்டவர்களுக்கு வாழ்வினில் வறுமையே வந்துசேருமன எடுத்துரைக்கின்றது திருக்குறள். தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

94/934:திருக்குறள்-சூது

சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின் வறுமை தருவதொன்று இல. இழிவான துன்பம் தந்து பண்பை அழிக்கும் சூதுபோல் வறுமை தருவது வேறில்லை.கீழ்தனமான விடயங்கள் பலதை வாழ்வினில் எற்படுத்தி வாழ்வினை சீரளித்து வறுமைக்கே தள்ளி விடும் சூதினைபோல கெடிதியான எதுவும் இந்த உலகில் இல்லையென எடுத்துரைக்கின்றது திருக்குறள். தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.