Posts

97/970:திருக்குறள்-மானம்

இளிவரின் வாழாத மானம் உடையார் ஒளிதொழுது ஏத்தும் உலகு.மானக்கேடு வந்தபோது உயிரிழக்கும் மாண்புடையவரின் புகழ் விளக்கை உலகம் தொழுது போற்றும்.மானமே அழிந்துபோனது இனி எதற்கு இந்த உலகில் வாழ்க்கையென்று உயிரையிழக்கும் மானமுடையவர்களின் புகழ் என்றென்றும் இந்த உலகில் நிலைத்து நிற்குமென எடுத்துரைக்கின்றது திருக்குறள். கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம்.மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

97/969:திருக்குறள்-மானம்

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின்.மயிர் நீங்கின் உயிரிழக்கும் கவரிமான் போன்றவர் மானம் போவதாயின் உயிரிழப்பார்.ஆண் அன்னப்பறவையின் மயிர்கள் உதிர்ந்தால் கவரிமா இறந்துபோவதுபோல கவரிமாவைபோல் வாழ்ந்த மனிதர்கள் தங்களின் மானத்தை இழக்கும்போது வெட்கத்தால் மனம்வருந்தி உயிரிழப்பார்களென எடுத்துரைக்கின்றது திருக்குறள். கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம்.மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

97/968:திருக்குறள்-மானம்

மருந்தோமற்று ஊன்ஓப்பும் வாழ்க்கை பெருந்தகைமை பீடழிய வந்த இடத்து.உயர் நலங்கெட்டு மானமிழந்த நிலையில் உடலை வளர்த்தல் உயிருக்கு மருந்தாகுமா? உயர்ந்த நலமில்லாமல் மானம் மரியாதையிழந்து நிலையிலும் உடம்பை வளர்த்துக்கொள்ளவேண்டுமா? அதுவே உடலின் உயிருக்கு மருந்துபோலாகுமா? என எடுத்துரைக்கின்றது திருக்குறள். கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம்.மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

97/967:திருக்குறள்-மானம்

ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே கெட்டான் எனப்படுதல் நன்று.பகவர் பின் சென்று வாழ்வதை விட மானத்துடன் தன்னிலையிருந்து இறப்பது மேல்.இந்த உலகின் மனித வாழ்க்கையில் தீயவர்களின் வழி நடத்தலில் வாழ்வதை விட தன்னிலையிருந்து சிறப்பாக வாழ்ந்து இறந்துபோவதே மேலேன எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜி பாலசுப்பிரமணியம்.கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம்.மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

97/966:திருக்குறள்-மானம்

புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று இகழ்வார்பின் சென்று நிலை.அவதிப்பார் பின் மானம் விட்டு நிற்பதால் என்ன பயன் ? புகழும் வாராது மறுமையில் விண்ணுலகும் கிட்டாது.மதிக்காதவர்கள் பின்னால் மானத்தை விட்டு ஏன் உறவு கொள்ளவேண்டும் அதனால் என்ன பயன் வரப்போகின்றது புகழும் அடையமுடியாது அதனால் செர்க்கத்தையும் பார்க்கபோவதில்லையென எடுத்துரைக்கின்றது திருக்குறள். கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம்.மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

97/965:திருக்குறள்-மானம்

குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ குன்றி அனைய செயின். ஒருகுண்டுமணியளவு இழிவான செயலை செய்தாலும் மலை போன்ற பெருமையுடையவரும் தாழ்வார் .சிறிதளவான கீழ்த்தனமான செயல்களை செய்தாலும் அதை பெருமையாக்கி பெருமையடைத்தாலும் மானத்தால் சமுதாயத்தில் தாழ்த்தப்படுவார்களென எடுத்துரைக்கின்றது திருக்குறள். கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம்.மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

97/964:திருக்குறள்-மானம்

தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர் நிலையின் இழிந்தக் கடை.நற்குடிமக்கள் உயர்ந்த பண்பிலிருந்து இறங்கிய விடத்து தலையிலிருந்து உதிர்ந்த மயிரினைப்போல் இழக்கப்படுவர்.உயர்ந்த பண்பிலிருந்து மனிதர்கள் கீழ் இறங்க வேண்டிய நிலை வாழ்வியல் வரும்போது உதிர்ந்து வீழ்ந்த தலைமுடியைப்போல் சமுதாயத்தில் வாழ்ந்த வாழ்வினை இழக்கநேரிடுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள். கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம்.மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.