Posts

104/1040:திருக்குறள்-உழவு

இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின் நிலமென்னும் நல்லாள் நகும்.நாங்கள் வறியவர்கள் என்று சோம்பலுடன் திரிபவர்களை கண்டால் நிலமகள் அவர்கள் சோம்பலைக் கண்டு நகைப்பாள்.இந்த பூமியில் சந்தோஷமாக வாழவே வழியில்லை என்று முயற்சி இல்லாது செப்பித்திரியும் மனிதர்களை இனக்கண்டு பூமித்தாயே வெறுக்குமென எடுத்துரைக்கின்றது திருக்குறள். கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம்.மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

104/1039:திருக்குறள்-உழவு

செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து இல்லாளின் ஊடி விடும்.நிலத்துகுரியவன் உரிய காலங்களில் நிலத்தை கவனியா திருப்பின் அது ஊடல் கொண்ட மனைவிபோல் பயன்தராது போகும்.விவசாயி தனது வயல் நிலத்தை தினம்தினம் சென்று பார்வையிட்டு உழுது பதப்படுத்தி பயிரிட்டு தண்ணீர்இறைத்து பயிரிட்டபயிர்களை காக்காது போனால் கோபம் கொண்ட மனையாள் மாதிரி பயனற்று போய்விடுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள். கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம்.மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

104/1038:திருக்குறள்-உழவு

ஏரினும் நன்றால் எருஇடுதல் கட்டபின் நீரினும் நன்றதன் காப்பு. சும்மா நிலத்தை உழுவதைக் காட்டிலும் உறமிடுவதும் களை எடுத்து நீர் பாய்ச்சுவதைக் காட்டிலும் பயிருக்கு அழிவு வராமல் காப்பது சிறந்தது.வயலில் பயிர்களை விதைத்தால் அவற்றை பூச்சிகள் மிருகங்கள் சேதப்படுத்தாமல் பாதுகாத்து கொள்ளல் வேண்டும் அதே வேளையில் மண்ணை நன்றாக பண்பட உழுதும் உரமிட்டும் பயிர்களின் நடுவில் களைகள் இருப்பினும் அவற்றை அகற்றினால்தான் பயிர்கள் பாதுகாக்கப்பட்டு நன்றாக விளைச்சலை கொடுக்குமென எடுத்துரைக்கின்றது குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

104/1037:திருக்குறள்-உழவு

தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் வேண்டாது சாலப் படும். உழவர் ஒரு பலப்புழுதி காற்பலமாகும் வண்ணம் நிலத்தினை உழவன் காயவிடுவானாயின் ஒரு பிடி எருவுமின்றி நிலம் நன்றாக விளையும்.விவசாயிகள் விவசாயநிலங்களை நன்றாக பண்பட பல முறை உழுது நிலத்தின் மண்ணை பண்படுத்தினால் உரங்கள் போடாமலே பயிர்கள் நன்றாக விளைத்தலை கொடுக்குமென எடுத்துரைக்கின்றது குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

104/1036:திருக்குறள்-உழவு

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம் விட்டேம் என் பார்க்கும் நிலை .உழவர் தம் தொழில் செய்யாது கை மடக்கியிருப்பாராயின் அனைவரும் விரும்பும் உணவும் இல்லை துறவிகளுக்கும் துறவுமில்லை.விவசாயிகள் தங்களின் உழவுதொழிலை செய்யாது கைவிடுவார்கள் ஆனால் மனிதர்களுக்கு சாப்பிடுவதற்கு உணவு இல்லாமல் போகும் பட்டினியில் வாடநேரிடும் இந்த உலகில் எதுவுமே தேவையில்லை என்று வாழும் துறவிகள் கூட சாப்பிடாமல் வாழமுடியாத நிலை உருவாகுமென வல்லமை படைத்தவர்களென எடுத்துரைக்கின்றது குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் . பாலாஜி பாலசுப்பிரமணியம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

104/1035:திருக்குறள்-உழவு

இரவார் இரப்பார்கொன்று ஈவர் கரவாது கைசெய்தூண் மாலையவர்.உழவுத் தொழில் செய்து வாழ்பவர் இரக்கமாட்டார் தன்னை நாடி இரப்பவர்க்கு இல்லை எனக்கூறாது கொடுப்பார்.இந்த உலகில் உழவர்கள் தங்கள் உழைப்பில் வாழவே விருப்புவார்கள் மற்றய மனிதர்களிடத்தில் ஒருபோது தானம் கேட்டு நிற்கமாட்டார்கள் தானம் கேட்டு வந்தோருக்கு ஒருபோதும் தானம் செய்யாது இருக்கமாட்டார்கள் அதுவே உழவர்களின் வாழ்வின் தனிச்சிறப்பென எடுத்துரைக்க்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் . பாலாஜி பாலசுப்பிரமணியம் . வல்லமை படைத்தவர்களென எடுத்துரைக்கின்றது குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

104/1034:திருக்குறள்-உழவு

பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர் அலகுடை நீழலவர். நெற்ச்செல்வமுடைய உழவர் உலக அரசர்களின் கீழுள்ள நிலம் முழுவதையும் தம் அரசர் கீழாகச் செய்வர்.நெல்பயிர்செய்யும் விவசாயிகள் வேறு வேறாக பிரிந்து கிடைக்கும் அரசாட்சியாளர்களின் விவசாய நிலங்களை ஒரே குடையின் கீழ் தாம் வாழுகின்ற நிலப்பரப்புக்குள் உட்பட்ட அரசின்கீழ் கொண்டுவரும் வல்லமை படைத்தவர்களென எடுத்துரைக்கின்றது குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் . பாலாஜி பாலசுப்பிரமணியம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.