Posts

112/1120:நலம் புனைந்துரைத்தல்

அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் அடிக்கும் நெருஞ்சிப் பழம். அனிச்சம் மலரும் அன்னத்தின் இறகும் கூட காதலியின் பாத்த்திற்கு நெருஞ்சி முள்ளாகும். அனிச்சம் பூவாக இருந்தாலும் அன்னப்பறவையின் இறகாக இருந்தாலும் பெண்களின் கால்களுக்கு அவைகள் நோவை ஏற்ப்படுத்தும் ஏன் என்றால் பெண்களின் பாதங்ள் அவ்வளவு மென்மையானவையென எடுத்துரைக்கின்றது திருக்குறள் .

112/1119:நலம் புனைந்துரைத்தல்

மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின் மலர்காணத் தோன்றால் மதி.நிலவே மலர் கண்ணுடையவளைப் போல நீ ஆக விரும்பினால் பலர் காணத் தோன்றாதே. முழுமதி நிலவே பூங்கள் போல கண்களுடைய பெண்ணினை போல நீயும் விளங்க வேண்டுமானால் மனிதர்ளின் கண்களில் தெரியும் படி உலாவித்திரியாதே என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.

112/1118:நலம் புனைந்துரைத்தல்

மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல் காதலை வாழி மதி.நிலவே என் காதலி முகம்போல் ஒளி விடுவாயானால் நீயும் என் காதலுக்கு உரிமை.நீள் வான் முழுமதியே உன் அழகு பெண்ணின் முகவடிக்கு ஒப்பானதென இருக்குமாயின் உன்னையும் நான் விருப்புவேன் நீயும் என் மனதுக்கு பிடித்த அழகுதான் என எடுத்துரைக்கின்றது திருக்குறள் .

112/1117:நலம் புனைந்துரைத்தல்

அறுவாய் நிறைந்த அவிர்மதிக்கும் போல மறுவுண்டோ மாதர் முகத்து. நிலவு வளரும் பின் தேயும் . ஆனால் காதலி முகத்தில் அக்குறை உண்டோ? நிலவும் தேய்ந்து வளரும் அதில் உள்ள குறைபாடு கூட இந்த பெண்ணின் அழகிய முகத்தில் இல்லையே இவள் பெண்ணா இந்திரலோக தேவதையா என எடுத்துரைக்கின்றது திருக்குறள். கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம்.மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

112/1116:நலம் புனைந்துரைத்தல்

மதியும் மடத்தை முகனும் அறியா பதியிற் கலங்கிய மீன். வானத்தில் சுழன்று திரியும் விண்மீன்கள் இது நிலவு இது மாதர் முகம் என அறியாமல் திகைத்தன. பெண்ணின் முகவடிவுக்கும் நிலவின் அழகிற்கும் வித்தியாசம் தெரியாது வானில் திரியும் விண்மீன்கள் அதிசயமாக பார்க்கின்றன என எடுத்துரைக்கின்றது திருக்குறள். கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம்.மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

112/1115:நலம் புனைந்துரைத்தல்

அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு நல்ல படாஅ பறை. அனிச்ச மலரை காம்புடன் சூடிய இவள் இடைக்கு நல்ல பறைகள் ஒலியாது.அந்த பெண்ணுக்குகாக நல்லபறை சாற்றப்படவில்லை அவள் இடுப்புடைந்து வீழ்ந்தாள் அவள் அனிச்சம்பூவை காம்பு நீக்காது சூடியதால் அதன் பலனை அனுபவிக்கவேண்டிய சூழ்நிலையானதென எடுத்துரைக்கின்றது திருக்குறள். கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம்.மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

112/1114:நலம் புனைந்துரைத்தல்

காணிற் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும் மாணிழை கண்ணொவ்வோம் என்று.குவளைமலர்கள் இவள் கண்ணை நோங்கி நாம் உவமையாக மாட்டோமென்று தலைகுனியும்.பெண்ணின் கண்களை குவளை மலர்கள் பார்க்கமுடிந்தால் இந்த பெண்ணின் கண்பார்வைக்கு என்னால் ஈடுகொடுக்கமுடியவில்லையேன தலையை குனியும் மலர்களாகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள். கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம்.மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.