Posts

115/1150:அலர் அறிவுறுத்தல்

தாம்வேண்டின் தலகுவர் காதலர் யாம்வேண்டும் கெளவை எடுக்கும் இவ்வூர்.காதலர் அவர் விரும்பினால் அருளுவார் , இவ்வூர் தாம் எதிர்பார்த்தபடி தூற்றுகிறது.ஊர்மக்கள் வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசிக்கொள்வார்கள் காதலிப்பவரும் அவர்களுடன் சேர்ந்துகொண்டு அவர்கள் கூறுவதையே ஏற்றுக்கொள்ளக்கூடுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.

115/1149:அலர் அறிவுறுத்தல்

அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார் பலர்நாண நீத்தக் கடை.அஞ்சாதே என்றவர் பலர் அறிய பிரிந்தபோது ஊர் பேச்சுக்கு அஞ்சி இருக்கமுடியுமா? ஆண் பெண்ணுக்கு உறுயளித்திருத்தார் உன்னைவிட்டு பிரியமாட்டேன் நீ பயப்பிடதேவையில்லையென்று இருந்தும் அவர் பிரிந்து போய்யிருக்கும் போது பெண் மட்டும் ஊரின் பேச்சுக்காக வெட்கபடமுடியுமா ? என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.

115/1148:அலர் அறிவுறுத்தல்

நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால் காமம் நுதுப்பேம் என்க.நெய்யூற்றி நெருப்பை அணைக்க முடியாது அது போன்றே ஊர்ப்பேச்சால் காமத்தீயை அணைக்க முடியாது. சமுதாயத்தின் பேச்சுகெல்லாம் பயந்து கொண்டு காதல் செய்வதை செய்யாமல் இருப்பதென்பது எரிகின்ற நெருப்பில் நெய்யையூற்றி எரிவதை அணைக்க முயற்சிப்பது போலாகும் அதேபோலதான் காதலிக்கும்போது ஊருக்குள் மக்கள் பேசிக்ககொள்வதால் காதலையும் அதன் காமதீயையையும் அதே மக்களால் நிறுத்தி விட முடியாதென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.

115/1147:அலர் அறிவுறுத்தல்

ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல் நீராக நீளும்இந் நோய் . காதற்பயிருக்கு ஊர்ப்பேச்சு உரம் , தாயின் கடும்சொல் நீர் இப்படியாக அது வளரும். ஆணும் பெண்ணும் விரும்பி காதல்வசப்படும்போது அக்காதலை ஊர்மக்கள் வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசும்போதொல்லாம் அந்த காதலுக்கு உரமாகும் அதேவேளையில் அன்னையின் கடும் சொல்லும் வளர்ப்பும் பயிருக்கு ஊற்றிய நீராக பயன்தந்து காதலை வளர்க்குமே தவிர ஒருபோதும் அழிந்து விடக்காரணமாகதென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.

115/1146:அலர் அறிவுறுத்தல்

கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும் திங்களைப் பாம்புகொண் டற்று.அவரை பார்த்து ஒரு நாள்தான் நிலவை பாம்பு பிடித்தது போல் ஊர்பேச்சு பரவியது.மனதால் நினைத்தவரை கண்டது ஒரே ஒருநாள்தான் ஆனால் ஊருக்குள் பேச்சோ நிலவையே பாம்பு கடித்ததைபோலென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.

115/1145:அலர் அறிவுறுத்தல்

களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம் வெளிப்படுந் தோறும் இனிது.மகிழ மகிழ கள்மீது ஆசை வளரும் காதல் பிறர் அறிய அறிய சிறக்கும். மதுவை குடிக்க குடிக்க அதில் மயங்கி அதே மதுவை விரும்புவதுபோல காதலும் மற்றவர்களால் அறியப்படும்போது அதற்கு அதன் சிறப்பு அதிகமாகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் .

115/1144:அலர் அறிவுறுத்தல்

கவ்வையால் கவ்விது காமம் அது இன்றேல் தவ்வென்னும் தன்மை இழந்து. ஊர்ப்பேச்சால் காதல் கவர்ச்சி அடைகின்றது இல்லையெனில் சிறப்பற்று சப்பென்றிருக்கும். காதலிப்பவர்களை பற்றியே ஊருக்குள் பேசி பேசியே காதலை பெருப்பித்து விடுவார்கள் அதனாலேயே அவர்களின் காதலும் வளர்கிறது இல்லையென்றால் அந்த காதல் இனிதாக இருக்காதென எடுத்துரைக்கின்றது திருக்குறள்