Posts

121/1210: நினைந்தவர் புலம்பல்

விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப் படாஅதி வாழி மதி.சந்திரனே நீ வாழ்க என்னை மனதால் பிரியாது பிரிந்து சென்றாரை காணும் வரை மறையாதிரு. முழுமதி நிலவே காதலன் மனதால் பிரிந்து செல்லாது பிரிந்து சென்றவரை தேடியாகவேண்டும் ஆதானால் நீ எனக்கு உதவியாக இருக்கவேண்டும் மறைந்து விடாதேயென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.

121/1209: நினைந்தவர் புலம்பல்

விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார் அளியின்மை ஆற்ற நினைந்து. நாமிருவரும் இருவேறல்லர் என்று கூறியவர் இரக்கமின்மையை நினைத்து என் இனிய உயிர் வீணே கழிகின்றது. நாங்கள் இருவரும் ஒர்உயிர் என்று சொன்ன காதலன் பிரிந்து போனதை நினைத்தே உயர் வாழ்ந்து வாழ்நாட்களை கழித்து வருகிறேன் என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.

121/1208: நினைந்தவர் புலம்பல்

எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ காதலர் செய்யும் சிறப்பு. எத்தனை அளவு நினைத்தாலும் காதலர் கோபிக்கமாட்டார் அவர் செய்யும் நன்மை அவ்வளவே அன்றோ.எவ்வளவு காதலித்தாலும் காதலர் கோபம் கொள்ளமாட்டார் அதுவே அவர் காதலியாகிய எனக்கு செய்யும் நன்மையாகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.

121/1207: நினைந்தவர் புலம்பல்

மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன் உள்ளினும் உள்ளம் சுடும்.அவருடன் துய்த்த இன்பத்தை மறவாதிருக்கின்றபோதே பிரிவை நினைத்தால் உள்ளம் கொதிக்கின்றது அவ்வின்பத்தை மறப்பேனாயின் என்நிலை என்னவாகும். கணவருடன் இணைந்திருந்த இன்பத்தை மறக்காமல் இருக்கின்ற போதே பிரியபோகின்றோம் என்பதை இதயத்தில் நினைதாலே இதயம் வருத்தப்படுகின்றது அந்த இன்பதை மறப்பேன் என்றால் என் நிலை என்ன ஆகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் .

121/1206: நினைந்தவர் புலம்பல்

மாற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடுயான் உற்றநாள் உள்ள உளேன்.அவருடன் கூடி நான் அனுபவித்த இன்பத்தை நினைத்துப் பார்த்து வாழ்வதனாலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.பெண் விரும்பி கூடி வாழ்ந்த ஆணுடன் இன்பத்தை அனுபவத்து வாழ்ந்த நாள்களை நினைத்து கொண்டே மீதி நாட்களையும் வாழ்ந்து முடிக்க விருப்புவாதாக எடுத்துரைக்கின்றது திருக்குறள் .

121/1205: நினைந்தவர் புலம்பல்

தந்நெஞ்சத்து எம்மைக் கூடிகொண்டார் நாணார்கொல் எந்நெஞ்சத்து ஓவா வரல். அவர் மனதில் நம்மை விரும்பாதபடி காத்துக் கொள்பவர் நம் மனதில் ஓயாது வருவதற்கு நாண மாட்டாரோ? ஆண் இதயத்தில் பெண்ணுக்கு இடமளிக்காதவர் பெண் இதயத்துக்குள் மட்டும் இடைவெளியின்றி வந்து போவதற்கு மனதில் கொஞ்சம்கூட வெட்கப்படமாட்டாரா? என எடுத்துரைக்கின்றது திருக்குறள் .

121/1204: நினைந்தவர் புலம்பல்

யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து ஒஒ உளரே அவர்.நம் உள்ளத்தில் அவர் எப்போதும் இருக்கிறார் அதுபோல அவர் உள்ளத்தில் நாம் இருக்கின்றோமா? ஆண் காதலர் இதயத்தில் பெண் காதலர் இருப்பது போல பெண்காதலர் இதயத்தில் ஆண் காதலர் இருப்பாரா ? என எடுத்துரைக்கின்றது திருக்குறள் .