47/470:திருக்குறள் - தெரிந்து செயல்வகை
எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மொடு கொள்ளாத கொள்ளாது உலகு.தம்முடைய தகுதிக்கு பொருந்தாத செயல்களை செய்தால் உலகம் ஏற்காது.ஆகவே அது இகழாத செயலை செய்யவேண்டும்.மனிதர்களின் தகுதிக்கு இயலுமான செயல்களைதான் இந்த உலகம் ஏற்றுக்கொள்ளும் தகுதிக்கு பொருத்தமில்லாத செயல்களை மனித உலகம் ஏற்றுக்கொள்வதில்லை. அதனால் இந்த உலகம் ஏற்றுக்கொள்ளும் வகையில் செயல்படல் சிறந்ததென எடுத்துரைக்கின்றது திருக்குறள். தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும். பாலாஜீ பாலசுப்பிரமணியம். அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

Comments