86/855:இகல் திருக்குறள்
இகல் எதிர் சாய்ந்து ஒழுக வல்லாரை, யாரே
மிகல் ஊக்கும் தன்மை யவர்? (குறள் 855 - அதிகாரம்: இகல்)
பொருள்:
பிறர் செய்யும் மாறுபாட்டிற்கு (பகைமைக்கு) எதிராகத் தாமும் சண்டையிடாமல், பணிந்து விலகிச் செல்ல வல்லவர்களின் தன்மையை எதிர்த்து வெல்ல முயல்பவர் உலகத்தில் யார்தான் இருக்க முடியும்? (எவரும் இருக்க முடியாது).
விரிவாக்கம்:
மற்றவர்கள் நம்மிடம் கோபப்பட்டுப் பகையை வளர்க்க நினைக்கும் போது, நாம் சினமடையாமல், விவேகத்துடன் விலகிச் சென்று அமைதியாக வாழ்பவர்களை எவராலும் வெல்ல முடியாது. அத்தகைய பொறுமைசாலிகளின் பலத்தை எதிர்த்துப் போராடி வெற்றி கொள்ளக் கூடியவர்கள் இந்த உலகில் எவரும் இல்லை; ஏனென்றால் அவர்களின் அமைதியே அவர்களுக்கு மிகப்பெரிய பாதுகாப்பாகவும் வெற்றியாகவும் அமைகிறது என்று வள்ளுவர் எடுத்துரைக்கிறார்.
English Translation:
Thirukkural:
Ikal Ethir Saaindhu Ozhuka Vallaarai, Yaarae
Mikal Ookkum Thanmai Yavar?
Meaning:
Who are they that can strive to overcome those who have the ability to yield and stand aside when hatred confronts them?
Explanation:
Valluvar highlights the invincible strength of those who possess the patience to step back and avoid confrontation when faced with hostility. Such composed individuals cannot be defeated by anyone, as their peaceful restraint is their greatest shield.
— Daily a Kural, Meaning, and Explanation. Balaji Balasubramaniam.
[God to man is Gita; Man to God is Thiruvasagam; Man to man is Thirukkural].
அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

Comments