89/889:திருக்குறள்-உட்பகை



திருக்குறள்:

எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்,

உட்பகை உள்ளதாங் கேடு. (குறள் 889 - அதிகாரம்: உட்பகை)

பொருள்:

உட்பகையானது எள் அளவுக்குச் சிறியதாக மிகவும் அற்பமானதாகத் தோன்றினாலும், அது உள்ளே இருக்குமானால் அதுவே ஒருவனுக்கு உறுதியான அழிவைத் தரும்.

விரிவாக்கம்:

வெளியே நம்முடன் பழகுவது போல் நடித்துக்கொண்டு, உள்ளுக்குள் நமக்குத் தீங்கு நினைக்கின்ற உட்பகை என்பது மிகவும் ஆபத்தானது. அது பார்ப்பதற்கு எள் அளவே மிகச் சிறியதாகத் தோன்றினாலும், தக்க சமயம் பார்த்து அது நம்மைப் பூண்டோடு அழித்துவிடும். எனவே, நமக்குள் இருக்கும் பகையையோ அல்லது நம்முடன் பழகும்போதே தீமை நினைக்கும் உட்பகையையோ ஆரம்பத்திலேயே கண்டறிந்து களைந்துவிட வேண்டும் என்பதை வள்ளுவர் எச்சரிக்கிறார்.

English Translation:

Thirukkural:

Edpaga Vanna Sirumaithe Aayinum,

Utpagai Ulla Dhaang Kedu.

Meaning:

Though an internal enemy be as small as a sesame seed, his presence portends ruin.

Explanation:

Valluvar warns that hidden hostility within a group or relationship, no matter how minor or insignificant it may first appear, carries the seed of total destruction. Internal treachery will inevitably lead to ruin if left unchecked.

— Daily a Kural, Meaning, and Explanation. Balaji Balasubramaniam.

[God to man is Gita; Man to God is Thiruvasagam; Man to man is Thirukkural].

அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்