90/900:திருக்குறள்-பெரியாரைப் பிழையாமை
இறந்தமைந்த சார்புடைய ராயினும் உய்யார்,
சிறந்தமைந்த சீரார் செறின். (குறள் 900 - அதிகாரம்: பெரியாரைப் பிழையாமை)
பொருள்:
உயர்ந்த பண்புகளையும் சீரமைந்த புகழையும் உடைய சான்றோர்கள் கோபம் கொண்டு வெறுப்பாரானால், மிகப் பொருத்தமான வலிய துணை உடையவராயினும் (அக்கோபத்திலிருந்து) தப்பியோட முடியாது.
விரிவாக்கம்:
பெரியோர்களின் சீற்றத்திற்கும் சான்றோர்களின் கோபத்திற்கும் ஆளானவர்கள், எவ்வளவுதான் பெரிய பாதுகாப்பைப் பெற்றிருந்தாலும் அல்லது வலிமையானவர்களின் துணையை நாடியிருந்தாலும், அவர்களது அழிவிலிருந்து தப்பிக்கவே முடியாது. சான்றோரின் சாபமோ அல்லது அவர்களின் ஆழ்ந்த மனத்துயரமோ எத்தகைய வல்லரசையும் வீழ்த்திவிடும் வல்லமை கொண்டது. எனவே, தவறுசெய்துவிட்டுப் பெரியோர்களின் கோபத்திற்கு ஆளாகாமல் அறநெறியில் வாழ்வதே பாதுகாப்பானது என்பதை வள்ளுவர் எச்சரிக்கிறார்.
English Translation:
Thirukkural:
Irandhamaintha Saarbudaiya Raayinum Uyyaar,
Sirandhamaintha Seeraar Serin.
Meaning:
Though they have the support of powerful and fitting allies, men will not escape if persons of perfected excellence and virtue are angered.
Explanation:
Valluvar cautions that even if wrongdoers possess immense backing and powerful protection, they cannot escape destruction if virtuous and noble sages turn against them in righteous indignation. The wrath of the truly wise is an irresistible force.
— Daily a Kural, Meaning, and Explanation. Balaji Balasubramaniam.
[God to man is Gita; Man to God is Thiruvasagam; Man to man is Thirukkural].
அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

Comments