101/1004:திருக்குறள்-நன்றியில் செல்வம்



திருக்குறள்:

எச்சம் என்று என்னுங் கொல்லோ ஒருவரால்

நச்சப் படாஅ தவன். (குறள் 1004 - அதிகாரம்: ஒப்புரவறிதல்)

பொருள்:

யாருக்கும் உதவி செய்யாததால் எவராலும் விரும்பப்படாத இரக்கமற்றவன், தனக்குப் பின் எஞ்சியிருக்கும் புகழாக எதனைக் கருதுவான்? (அவனுக்குப் பின் நிலைநிற்கக் கூடிய புகழ் எதுவும் இருக்காது).

விரிவாக்கம்:

மனிதன் மறைந்தாலும் அவனது புகழும் நல்ல செயல்களும் மட்டுமே இந்த உலகில் நிலைத்து நிற்கும். ஆனால், பிறருக்கு ஒருபோதும் உதவி செய்யாமல், தன் நலம் மட்டுமே பேணி வாழ்ந்து எவராலும் விரும்பப்படாத (நச்சப்படாத) கஞ்சன், தான் இறந்த பிறகு இந்தச் சமுதாலத்தில் தனக்கென என்ன மிச்சம் இருக்கப் போகிறது என்று கருதுகிறான்? அவனிடம் பொருள் இருக்கலாமே தவிர, அவனுக்குப் பின் நினைவுகூரத் தக்க நல்ல புகழோ அல்லது நற்பெயரோ சிறிதும் இருக்காது என்பதை வள்ளுவர் சாடுகிறார்.

English Translation:

Thirukkural:

Echcham Endru Ennunkollo Oruvaraal

Nachchap Padaadhavan.

Meaning:

What do they consider as their remaining legacy (or posterity), those who are not desired (loved) by anyone?

Explanation:

Valluvar questions the fate of selfish individuals who live without extending any kindness or help to others. When such uncharitable persons pass away, what lasting legacy or good name can they possibly leave behind? Wealth without virtue or generosity vanishes, leaving no fond memories or honorable remembrance in the hearts of society.

— Daily a Kural, Meaning, and Explanation. Balaji Balasubramaniam.

God to man is Gita; Man to God is Thiruvasagam; Man to man is Thirukkural.

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்