114/1140:நாணுத் துறவுரைத்தல்





திருக்குறள்:

யாங்கண்ணின் காண நகுப அறிவில்லார்

யாம்பட்ட தாம்படா வாறு. 

பொருள்:

நாங்கள் பட்ட காதற் துன்பத்தை அறியாத பேதைகள், நாங்கள் படும் துன்பத்தைப் போன்ற துன்பம் தமக்கு இல்லாத காரணத்தினால், என் கண்முன்னே என்னைக் கண்டு சிரிக்கின்றனர்.

விரிவாக்கம்:

காதலால் உள்ளம் உருகித் துயரப்படும்போது, அந்தத் துன்பத்தின் ஆழத்தை அறியாத அறிவற்றவர்கள் நம் கண்முன்னே நின்று கேலி செய்து சிரிக்கிறார்கள்.

ஒருவர் அனுபவிக்கும் கடுமையான மனவேதனைகளையும் துயரங்களையும் மற்றவர்கள் தாமும் ஒருமுறை அனுபவித்திருந்தால் அதன் வலி புரிந்திருக்கும்.

ஆனால், அத்தகைய வேதனைகளைத் தாங்கள் ஒருபோதும் படாத காரணத்தினால், பிறர் படும் துன்பத்தை உணராமல் பேதைகள் எளிதாகச் சிரிக்கிறார்கள்.

மற்றவர் பட்ட துயரத்தை உணரத் தெரியாதவர்களின் அறியாமையை இக்குறள் நயம்பட எடுத்துரைக்கின்றது.

English Translation:

Thirukkural:

Yaangannin Kaana Naguba Arivillaar

Yaampatta Thaampada Vaaru.

Meaning:

The ignorant laugh right before my eyes, seeing my grief, because they have not suffered the sorrow that I have endured.

Explanation:

The maiden laments the insensitivity of foolish people who mock her suffering.

Those who lack wisdom laugh in her presence simply because they have never experienced the deep anguish of love that she is going through.

If they had undergone similar pain, they would understand her plight instead of ridiculing it.

Thus, Thirukkural highlights how those who are untouched by sorrow remain blind and insensitive to the suffering of others.

— Daily a Kural, Meaning, and Explanation. Balaji Balasubramaniam.

God to man is Gita; Man to God is Thiruvasagam; Man to man is Thirukkural.

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்