14/136:திருக்குறள்-ஒழுக்கமுடைமை
திருக்குறள்:
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து. (குறள் 136 - அதிகாரம்: ஒழுக்கமுடைமை)
பொருள்:
ஒழுக்கம் தவறுவதால் பெரும் குற்றமும் துன்பமும் வந்து சேரும் என்பதை நன்கு அறிந்திருப்பதால், மனவலிமையும் அறிவும் உடைய சான்றோர் தம் கடமையிலும் ஒழுக்கத்திலும் சிறிதும் தளர மாட்டார்கள்.
விரிவாக்கம்:
அறிவும் மனஉறுதியும் உள்ள மனிதர்கள் கொஞ்சமும் பிழையில்லாமல் எப்பேர்ப்பட்ட கடினமான காரியத்தையும் தம் ஒழுக்கம் தவறாமல் சரிவரச் செய்து முடித்து விடுவார்கள்; ஏனென்றால் ஒழுக்கத்திலிருந்து தவறினால் பல பிரச்சினைகளும் துன்பங்களும் வாழ்வில் வந்து சேரும் என்பதை அவர்கள் முன்கூட்டியே தெளிவாக அறிந்திருப்பார்கள் என்பதைத் திருவள்ளுவர் இக்குறளில் எடுத்துரைக்கிறார்.
---
English Translation:
Thirukkural:
Ozhukkaththin Olgaar Uravor Izhukkaththin
Aedham Padupaak Karindhu.
Meaning:
The strong-minded and wise never swerve from virtuous conduct, knowing well the ruin and sorrow that arise from deviating from it.
Explanation:
Thiruvalluvar explains why disciplined and wise individuals remain steadfast in their duties and principles no matter how difficult the circumstances are. Because they clearly foresee the severe harm and troubles caused by moral lapses, they hold firm to integrity without faltering.
---
பொன்மொழி:
"ஒழுக்கம் தவறினால் துன்பம் வந்து சேரும் என்பதை அறிந்த மனவலிமை மிக்கவர்கள், எவ்வளவு கடினமான சூழலிலும் ஒழுக்கத்திலிருந்து சிறிதும் தளர மாட்டார்கள்."
தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்
— எழுதுகோல் முனையில் பாலாஜி பாலசுப்பிரமணியம்.
"அழிவது நாமாக இருந்தாலும், செழிப்பது தமிழ்மொழியாகட்டும்."
"எங்கும் தமிழ், எதிலும் தமிழ், என்றும் வாழும் உலகில் தமிழ்."
"உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு, திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு."

Comments