4/37:
திருக்குறள்:
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.
பொருள்:
அறத்தின் வழி நடந்து வாழ்பவருக்குக் கிடைக்கும் பயன் இதுதானா என்று நூல்களைக் கொண்டு விளக்க வேண்டியதில்லை; பல்லக்கைச் சுமப்பவனுக்கும் அதில் அமர்ந்து செல்பவனுக்கும் இடையே உள்ள வேறுபாடே அதற்குச் சான்றாகும்.
விரிவாக்கம்:
நல்வினையின் பயனை அறிய விரும்புவோருக்கு, பல்லக்கைச் சுமப்பவனின் உழைப்பும் அதில் ஏறிச் செல்லும் பயனாளியின் அமைதியான பயணமுமே நல்வினை-தீவினையின் விளைவை வெளிப்படையாக உணர்த்தும் சான்றாகும். மனிதர்கள் செய்யும் நற்செயல்களும் அறவழியும் அவர்களின் எதிர்கால வாழ்வையும் பிறவிகளையும் செழுமைப்படுத்தும் ஆற்றல் கொண்டவை என்பதை இக்குறள் எடுத்துரைக்கின்றது. தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும். பாலாஜி பாலசுப்பிரமணியம்.
English Translation:
Thirukkural:
Araththaaru Ithuvena Veandaa Sivigai
Poruththaanodu Oornthaan Idai.
Meaning:
There is no need for verbal explanations to demonstrate the fruits of virtue; the contrast between the palanquin bearer and its rider is proof enough.
Explanation:
The visible differences in human circumstances—symbolized by the contrast between one who carries a heavy load and one who enjoys a comfortable ride—serve as an everyday illustration of the law of cause and effect (Karma). Righteous actions yield comfort and peace, while neglecting moral principles leads to physical and mental hardship.

Comments