57/568:திருக்குறள்-வெருவந்த செய்யாமை
இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச் சீறின் சிறுகும் திரு.அரசன் அமைச்சரை கலந்துரையாற்றாது செய்து வரும் துன்பத்தைக் கண்டு சினம் கொண்டால் அவன் செல்வம் சிறுத்து விடும்.நாட்டை ஆளும் அரசாங்க ஆளுனர் ஏனை அமைச்சர்களுடன் கலந்தாலோசிக்காது தானே தன் சினத்தால் சீறி முடிவுகளை எடுத்துவிட்டு அமைச்சர்களை குறை கூறிக்கொண்டு சினம்கொண்டால் எதிர் வரும் துன்பங்களில் அந்த நாட்டின் செல்வங்கள் மெதுவாக அழிந்து போகுமென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .
Comments