Posts

16/151:திருக்குறள்-பொறையுடைமை

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வாரைப் பொறுத்தல் தலை. நிலம் தன்னைத் தோட்டுவாரையும் சுமந்து நிற்கும் அதுபோல தம்மை இகழ்வாரையும் பொறுத்துக் கொள்ளுதல் சிறப்பு.இந்த உலகில் மனிதர்கள் பூமித்தாயின் மேல் நின்று கொண்டே தங்களுடைய தேவைகளுக்காக குழிகளை வெட்டுவார்கள் அது தெரிந்திருந்தும் பூமித்தாய் மனிதர்களை சுமந்துகொள்வது போல மனிதர்களும் தங்களுக்கு வந்து சேருகின்ற அவமதிப்புகளையும் அதனை தருகின்றவர்களை பொறுத்துக்கொண்டு வாழ்வில் சிறப்புகளை அடைவது மனிதர்களுக்கு தனிச்சிறப்பென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும் .

15/150:திருக்குறள்-பிறன் இல்விழையாமை

அறன்வரையான் அல்ல செயினும் புறன்வரையாள் பெண்மை நயவாமை நன்று . அறம் தவறி தீமை செய்தாலும் பிறர் மனைவியை விரும்பாமல் இருப்பது நன்மையாகும்.வாழ்க்கையில் பல நன்மையில்லாத விடயங்களை செய்தாலும் இன்னொருவருடைய மனையாள் மீது ஆசை கொள்ளாது இருப்பது சமுகத்தாருக்கு நன்மையாகும் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

15/149:திருக்குறள்- பிறன் இல்விழையாமை

நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின் பிறற்குரியாள் தோள்தோயா தார்.கடல் சூழ்ந்த இவ்வுலகில் அனைத்து நன்மைகளுக்கும் உரியவர் யாரெனில் பிறன் மனைவியின் தோள்களைத்தழுவாதவனே.கடல் சூழ்ந்த புவியியல் மீது எல்லா நலன்களையும் பெற்று வாழ்கின்ற மனிதர்கள் யார் என்று பார்த்தால் பிறருக்கு சொந்தமான மனையாளையும் பிறருக்கு சொந்தமான மணவாளானையும்  தங்கள்வசமாக்கி கொள்ளாதவர்களே இந்த உலகில் சிறப்பான இல்லறவாழ்வில் சிறப்பானவர்களென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

15/148:திருக்குறள்- பிறன் இல்விழையாமை

பிறன் மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு.மாற்றன் மனைவியை விரும்பி நோக்காத பெரும் வீரம் நல்லோர்க்கு.முறையாகும் மேலும் ஒழுக்கத்தையும் கொடுக்கும் . அடுத்தவர்களின் மனையாளை பார்க்காத மிக பெரும் துணிவு நல்லவர்களுக்கு  நல்ல பழக்கமாகும் அது சிறந்த சிறப்பையும் கொடுக்கும் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும். பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு

15/147:திருக்குறள்- பிறன் இல்விழையாமை

அறனியலான் இல்வாழ்பவன் என்பான் பிறனியலாள் பெண்மை நயவாதவன்.அறத்தைடன் கூடி இல்லறம் நடத்துபவன் யாரெனின் மாற்றான் மனைவியின் சுகத்தை விரும்பாதவனே . நல்லகொள்கைகளுடன் சேர்த்து இல்லறம் நடத்தும் மனிதர்கள் இன்ரொருவருடைய மனையாளிடம் சிற்றின்பத்தை அனுபவிக்க விருப்பமாட்டார்கள் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

15/146:திருக்குறள்- பிறன் இல்விழையாமை

பாகை பாவம் அச்சம் பழியென நான்கும் இகவாவாம் இல்லிறப்பான் கண்.பாகை பாவம் பழி அச்சம் என்ற நான்கும் பிறன் மனையாளை அடைய எண்ணுபவனை விட்டு  நீங்காது.விரோதம் தீய செயல்கள் பழிசூழ்ந்தநிலைகள் இந்த  நாலும் இன்ரொருவருடைய மனைவியை அனுபவிக்க நினைக்கும் போது  அவர்களை விட்டு நீங்காது என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

15/145:திருக்குறள்- பிறன் இல்விழையாமை

எளிதென இல்லிறப்பான் எய்து மெஞ்ஞானம் விளியாது நிற்கும் பழி . இவளையடைதல் எளிதென்று எண்ணி பிறன் மனைவியை அடைய விழைபவன் நீங்காத குடிபழிக்கு ஆளாவான்.இந்தப் பெண்ணை அடைவது சுலபம் என்று நினைத்து பிறருடைய மனைவியை  அடைமுயற்ச்சிப்பவர்கள் என்றுமே அழிக்க முடியாத குடும்ப பழிக்கு ஆளாவார்கள் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.