Posts

20/192:திருக்குறள்-பயனில சொல்லாமை

பயனில் பல்லார் முன் சொல்லல் நயனில நட்டார்கண் செய்தலின் தீது  நண்பர்களுக்குத் தீமை செய்வதைக் காட்டிலும் கொடியது பிறர் முன் வீணாக பேசித்திரிவாதாகும் . நட்புறவுக்கு மாறாக வீண் வார்த்தைகளை சமுகத்தின் முற்றத்தில் செப்பித்திரிவது  நல்ல நட்புக்கு எதிராக செயல் படுவதை விட தீமையானதாகுமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு . 

20/191:திருக்குறள்-பயனில சொல்லாமை

பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லோரும் எள்ளப்படும் அறிவுடையவர் கேட்டு வெறுக்கும்படி பயனற்ற சொற்களைப்  பேசுபவன் அனைவராலும் வெறுக்கப்படுவான்.அறிவுள்ள மனிதர்கள் எல்லோரும் கேட்டு வெறுக்கும்படி பிரியோசனமில்லாத வார்த்தைகளை பேசுபவர்களை அனைத்து மனிதர்களாலும் வெறுத்து ஒதுக்கப்படுவார்கள்.என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ் .

19/190:திருக்குறள்-புறங்கூறாமை

ஏதிலார் குற்றம்போல் தன்குற்றங் காண்கிற்பின் தீதுண்டோ மன்னும் உயிர்.பிறர் குறைகளை கண்டு புறங்கூறுவது போல்.புறங்கூறும் தன் குற்றத்தை கண்டால் அவர் உயிர்க்கு எத்தீங்கும் நேராது.மற்றவர்களின் வாழ்க்கையிலும் அவர்களின் வாழ்வியல் சிந்தனைகளிலும்குற்றங்களையும் குறைகளையும் கண்டு புறம் கூறித்திரிவது போல புறம்கூறும் தங்களின் குற்றத்தையும் குறையையும் மனதால் அறிந்து வாழ்க்கையை திருத்திக்கொண்டிருந்தால் நீண்ட காலங்கள் உயிர் வாழமுடியுமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ் .

19/189:திருக்குறள்-புறங்கூறாமை

அறன் நோக்கி ஆற்றுங் கொல் வையம் புறன்நோக்கி புன்சொல் உரைப்பான் பொறை. புறங்கூறித் திரிபவன் உடலையும் உலகம் சுமக்கிறது என்பது அறம் காக்கவேயாகும்.மனிதர்களின் முகத்துக்கு முன் எதுவும் சொல்லாது நல்லவர்கள் மாதிரி  சமுகத்தில் வாழ்ந்துகொண்டு அதே மனிதர்களைப்பற்றி  இந்த உலகிற்கு புறம் சொல்லித்திரிபவர்களின் உடல்களையும் பூமி தாங்குதென்றால்  மனிதர்களின் அற வாழ்வினை காக்கவேண்டும் என்பதற்காகவே என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ் . 

19/188:திருக்குறள்-புறங்கூறாமை

துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார் என்னைகொல் ஏதிலார் மாட்டு.தன் நண்பர்களின் குற்றத்தை புறங்கூறித்திரிபவர் நண்பர்களல்லாதவர் குற்றத்தை எவ்வாறுத் தூற்றாதிருப்பா மாந்தர்கள் தங்களது நல்லாக நெருங்கிய மித்திரர்களின்  குற்றவியல்களையும் குறை நிறைகளை கூட ஊருக்குள் அடுத்தவர்களிடம் அவதூறு செய்து செப்பித்திரியும் இயல்புடையவர்களிடம் கிட்ட நெருங்கி பழகாத சமுகத்தின் மனிதர்களை பற்றி என்னெல்லாம் பேச மாட்டார்கள் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ் .

19/187:திருக்குறள் -புறங்கூறாமை

பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி  நட்பாடல் தேற்றாதவர். இனிய சொற்கள் பேசி மகிழத் தெரியாதவர் பழிச்சொல்லி தன் உறவினரையும் பிரித்து விடுவர். நல்லவார்த்தைகள் சொல்லி இனிதாக வாழத்தெரியாத மனிதர்கள் பழிச்சொற்களை சுமத்தி தங்களின் உறவினர்களையே  விலக்கி  வாழ்வினில் வாழ முன்ப்படுவார் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ் .

19/186:திருக்குறள் -புறங்கூறாமை

பிறன்பழி கூறுவான் தன்பழியுள்ளும் திறன் தெரிந்து கூறப்படும் . ஒருவனுடைய குற்றங்களை கூறுகின்றவனது இழிச்செயல்களை மற்ரவர் ஆராய்ந்து எடுத்துக் கூறுவர்.மற்ரவர்கள் மீது குறை குற்றங்களை பேசித்திரிபவர்களின் கடுமையான குற்றச்செயல்களை மக்கள் ஆராய்ந்து மற்ரவர்களுக்கு எடுத்துச்செல்லுவார்கள் என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம் அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும் .