Posts

24/240:திருக்குறள்-புகழ்

வசை ஒழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய வாழ்வாரே வாழாதவர் பழி உண்டாகாமல் வாழ்பவரே வாழும் தகுதியுடையவர்கள் புகழின்றி வாழ்பவர் இறந்தவர்க்குச் சமம்.மனிதர்களின் வாழ்வில் பழிகள் பாவங்களை செய்யாது வாழ்கின்ற மனிதர்களே அறநெறிகளுடன் வாழும் சிறந்த மனிதர்கள் நல்லவர்கள் என்று புகழை எடுக்காது வாழும் மனிதர்கள் உயிருடன் வாழ்ந்தாலும் இறந்தவர்களுக்கு நிகரே என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ் .

24/239:திருக்குறள்-புகழ்

வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா யாக்கை பொறுத்த நிலம்.புகழில்லாதவன் உடம்பை சுமக்கும் நிலம் கூட விளைச்சலற்ற நிலமாகிவிடும்.பேரும் புகழும் இல்லாதவர்களின் மேனிகளை சுமக்கின்ற பூமி கூட பசுமையின்றி விவாசாயம் செய்யக் கூட முடியாத வறண்ட பூமியாகிவிடுமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

24/238:திருக்குறள்-புகழ்

வசையென்ப வையத்தார் கொல்லாம் இசையென்னும் எச்சம் பெறாஅ விடின் நிலைத்திருக்கும் புகழை ஒருவன் பெறாவிடின் அவன் பிறப்பு உலகிற்கு பெரும் பழியாகும் .மனித வாழ்வினில் பிரபலமடைந்தவர்கள் புகழை பெறுக்கின்றார்கள்அவர்களின் புகழ் இறப்புக்கு பின்னும் நிலைக்க வேண்டும் அப்படி நிலைக்க விடின் அதுவே உலகத்தில் வாழுகின்ற மனிதர்களுக்கு பழிப்பாகிவிடுமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

24/237:திருக்குறள்-புகழ்

புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை இகழ்வாரை நோவது எவன் . புகழ் பெறும் தகுதியற்றவர் தம்மை பிறர் இகழ்வதைக்கண்டு தம்மை நோகாமல் பிறரை நோவது ஏனோ ? உலகில் புகழ்ப்படவாழமுடியாத மனிதர்கள் தங்களை தாங்களே நொந்து கொள்ளவேண்டும் அதை விட்டு தம்மை வெறுத்து பேசுகின்ற மனிதர்களின் மனதை காயப்படுத்துவதும் ஏனோ ? என கேள்விக்குறியான ஒரு சிறந்த திருக்குறளாக எடுத்துரைக்கிறது .தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

24/236:திருக்குறள்-புகழ்

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோற்றலின் தோன்றாமை நன்று.புகழ் ஈட்டும் மனிதராகப் பிறக்க வேண்டும் அப்புகழ் பெறும் குணங்களைளில்லாத்தவராக பிறத்தலின் பிறக்காகமலிருப்பது நன்று மனித வாழ்வினில் புகழை தேடிக்கொள்கூடியவராக பிறகும்போதே பிறத்தல் வேண்டும் அப்படியான இயல்புகள் இல்லாதவர்கள் பிறப்பதை விட பிறக்கமாலே இருக்கலாம் மாபெரும் சபைகளில் தோன்றக்கூடிய தகுதியுள்ள மனிதர்கள் தோன்றினால் புகழோடு தோன்றவேண்டும் அத்திறன் இல்லாவிடின் தோன்றாமல் இருப்பதே நல்லதென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.  உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு  திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

24/235:திருக்குறள்-புகழ்

நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும் வித்தகர்க் கல்லால் அரிது.பொருள் கொடுத்து பெற்ற பெரும் புகழுடம்பை இவ்வுலகில் விடுத்து இறப்பது அறிவுடையார்க்கே இயலும்.பொன் பொருள் செல்வங்கள் அனைத்தையும் ஊர்மக்களுக்கு கொடுத்து புகழ் பெற்ற உடம்பை இந்த உலகிற்கு விட்டிட்டு உயிர் மட்டும் இறந்து போவது திறனும் அறிவும் மனவலிமையுமுள்ள சமுகத்சிந்தனையாளர்களால்தான் முடியுமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓருகுறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு . 

24/234:திருக்குறள்-புகழ்

நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப் போற்றாது புத்தேள் உலகு.உலகளவு புகழ் பெற்றவர்களை வானுலகம் தேவர்களைப் போற்றாது புகழ் பெற்றவரையே போற்றும் பாரினில் மனிதர்கள் வாழும் வரை நீண்டகாலம் புகழை தரக்கூடிய செயல்களை செய்து வந்தால் அந்த தேவலோகத்தின் தேவர்களை கூட தேவலோகம் போற்றாது சிறந்த அறத்தை மனிதர்களுக்கு அளித்த அந்த புகழ்வேந்தனையே போய்சேருமென எடுத்துக்கின்றது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .