Posts

33/325:திருக்குறள்-கொல்லாமை

நிலை அஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலை அஞ்சிக் கொல்லாமை சூழ்வான் தலை.கொலைப் பாவத்திற்கு அஞ்சி கொல்லாமை எனும் அறத்தை போற்றுபவன் பிறவிக்கு அஞ்சும் துறவியினும் மேலானவன்.பிரபஞ்சத்தில் மனித வாழ்க்கை வெறுத்து துறவியாகி விட்டவர்களை காட்டிலும் மிக சிறந்தவர்கள் தங்களின் கொலைத்தொழிலை கைவிட்டு சிறந்த வாழ்வை புதிதாக ஆரம்பித்து இந்த உலகில் வாழ்ந்து காட்டுபவர்களே என எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உன் தாய்மொழி மதிக்கப்படவில்லை என்றால் உன் குரல்வளை நெரிக்கப்படுகின்றது என்று பொருள்.

33/324:திருக்குறள்-கொல்லாமை

நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும் கொல்லாமை சூழும் நெறி.நல்லறம் எனப்படுவது ஒர் உயிரும் கொல்லாமையாகிய் அறத்தினை நினைக்கும்நெறியாகும்.மனிதர்களின் அறநெறிகள் அடங்கிய வாழ்வு என்னவென்றால் இந்த பிரபஞ்சத்தில் வாழுகின்ற எந்த உயிர்களை அழித்து வாழக்கூடாது என்பதே அதுவே இந்த பூமியில் தலைசிறந்த அறத்தின் வாழ்வியல் சிறப்பாகுமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும்  பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

33/323:திருக்குறள்-கொல்லாமை

ஒற்றாக நல்லது கொல்லாமை மற்று தன் பின்சாரப் பொய்யாமை நன்று.உயர்ந்த ஒர் அறம் என்பது பிற உயிர்களை கொல்லாமையாகும் அதற்கு துணையாவது பொய் பேசாமை எனும் நல்லறமாகும்.சிறந்த மனிதர்கள் நல்லற வாழ்வு என்னவென்றால் எல்லா உயிர்களையும் அன்புடன் ஆதாரித்து வளர்ப்பதாகும் எந்த உயிர்களையும் உயிர்வதை செய்து கொல்லாமையாகும் அதன்பின்பாக சிறப்பு நல்லற வாழ்வென்றால் வாழ்வினில் பொய்பேசாமல் வாழ்ந்து காட்டுவதாகுமென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு . 

33/322:திருக்குறள்-கொல்லாமை

பகுத்துண்டு பல்லுயிர் ஒப்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.தன் உணவை பகிர்ந்து கொடுத்து தானும் உண்டு பல உயிர்களை காப்பதுவே அறநூலார் கூறிய சிறந்த அறமாகும். தாங்கள் உண்ணும் உணவை தாங்களும் உண்டு பிற உயிர்களுக்கு கொடுத்து வாழவைக்கும் மனிதர்களே அறவழியில் சிறந்தவர்கள் அறநூலார் சொற்படி அறவாழ்வு வாழுகின்ற சிறந்த மனிதர்களென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

33/321:திருக்குறள்-கொல்லாமை

அறவினை யாதனின் கொல்லாமை கோறல் எல்லாந்தரும்.அறம் என்பது உயிர்களை கொல்லாமையே அவ்வாறு  கொன்றால் எல்லா கேடுகளும் வந்து சேரும்.மனிதர்களே உங்கள் அற வாழ்க்கை என்பது எந்த உயிர்களையும் அழிக்காமல் வாழ்வதே பேருக்கும் புகழுக்கும் பதவிக்கும் அரசியல் மாற்றங்களுக்கும் செல்வச்செழிப்பாக வாழ்வதற்காக பிறர் உயிர்களை கொலை செய்தால் அதனால் உங்களையும் உங்கள் குடுப்பத்தாரையும் உங்களுக்கு வேண்டியவர்களையும் இழக்கநேரிடும் அத்துடன் எல்லா கேடுகளும் கேடுகளை செய்தவர்களையே வந்து சேரவழியமைக்குமென எடுத்துரைக்கிறது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உன் தாய்மொழி மதிக்கப்படவில்லை என்றால் உன் குரல்வளை நெரிக்கப்படுகின்றது என்று பொருள்.  

32/320:திருக்குறள்-இன்னா செய்யாமை

நோய் எல்லாம் நோய் செய்தார் மேலவாம் நோய் செய்யார்  நோயின்மை வேண்ட பவர்.துன்பங்கள் அனைத்தும் துன்பம் செய்தவர்க்கே வந்து சேரும் துன்பம் வேண்டாதவர் பிறருக்கு தீமை செய்யார்.உலகத்தில் மனிதர்களின் வாழ்வியல் சிந்தனையில் வேதனைகள் அனைத்து வேதனைகளை பிறருக்கு புரிந்தவர்களுக்கே வந்து சேரும் தீமைகளை வாழ்வில் வேண்டாம் என்று நினைப்பவர்கள் தீமைகளை பிற மனிதர்களுக்கு செய்யமாட்டார்கள் அதனால் துன்ப துயரமற்ற வாழ்கை வாழ்வினில் அமையுமென என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

32/319:திருக்குறள்-இன்னா செய்யாமை

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்.ஒருவனுக்கு காலையில் துன்பம் செய்தால் தனக்கு துன்பம் மாலையில் பிறர்செய்யாமல் தானே வந்து சேரும்.மனித வாழ்வில் பிறருக்கு முற்பகல் தீங்குகளை செய்தால் அதே தீங்குகள் பிற்பகலில் திரும்பி எங்களையே வந்தடையும் அது பிறர் செய்துதான் வரவேண்டும் என்று அல்ல அது தானாகவே வந்து சேரும் அதனால்தான் முற்பகல் செய்யும் பிற்பகல் விளையும் என்றும் கூறுவதுண்டு மற்றவர்களுக்கு தீங்குகளை புரியாது வாழ்வதே வாழ்வியல் சிறப்பென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .