Posts

34/340:திருக்குறள்-நிலையாமை

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு.உடம்பினுள் குடியிருந்து மாறி மாறி செல்கின்ற உயிருக்கு நிலையான உடம்பு கிடையாது.உயிரினங்களின் உடல்களில் வாழுகின்ற உயிர்கள் உடல் விட்டு உடல் மாறி சென்று வாழ்வதுண்டு ஆனால் உயிருக்கு நிலையான ஒரு உடல் இல்லையென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

34/339:திருக்குறள்-நிலையாமை

உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு.உறக்கம் போன்றது இறப்பு உறங்கி விழிப்பது போன்றது பிறப்பு.மனிதர்களே உங்கள் வாழ்வில் நித்திரை என்பது இறப்பு போலாகும் நித்திரை கலைந்து கண்விழிப்பது என்பது புதிதாக நீங்கள் பிறப்பெடுத்தமாதிரி ஆகும்.ஆதனால் இன்று இருப்பவர்கள் நாளை இருப்பதில்லை இன்றயநாள் மட்டுமே உங்கள் நல்நாள் நீங்கள் உறங்கச்சென்றால் மீள விழித்து கொள்வீர்களா அல்லது நீண்ட உறக்கத்தில் ஆழ்ந்து மரணத்தை தழுவிக்கொள்வீர்களா என்பது மனித வாழ்வில் நிதந்தரமில்லையென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

34/338:திருக்குறள்-நிலையாமை

குடம்பை தனித்து ஒழியப் புள் பறந்தற்றே உடம்போடு உயிரிடை நட்பு.உடலுக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பு கூடு இருக்க அதை விட்டு பறந்து செல்லும் பறவை போன்றது.மனித உடம்பில் வாழ்ந்துகொண்டிருக்கும் உயிருக்கும் உடம்புக்கும் உள்ள தொடர்பு உயிர் உடலை விட்டு நீங்கி விட்டால் மீண்டு அந்த உடலில் உயிர் வாழ்வதில்லை என்பதே ஆகுமென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு

34/337:திருக்குறள்-நிலையாமை

ஓருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப கோடியும் அல்ல பல.மறுநொடி தாம் வாழ்வது நிலையல்ல என அறியாதவர் எண்ணுகின்ற எண்ணங்கள் பல கோடி.அடுத்த நிமிடங்களின் வாழ்கை என்ன வென்று தெரியாத மனிதர்களின் வாழ்க்கைத்திட்டங்கள் எண்ணிக்கையற்றது தங்களால் இந்த உலகையே ஆள்ந்து அனுபவித்து விடமுடியும் என்ற பல எண்ணங்கள் மனிதர்களின் வாழ்வியலில் அடங்கியுள்ளன என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்

34/336:திருக்குறள்-நிலையாமை

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்து இவ்வுலகு.நேற்று உயிருடனிருந்தான் இன்று இறந்து விட்டான் என்பதே இவ்வுலகின் இயல்பு.பிறந்து வளர்த்து இந்த பூமியில் மனிதர்கள் நேற்று வரை பல இன்ப துன்பங்களுடன் வாழ்ந்தார்கள் இன்று இறந்து போனார்கள் என்பதே மனித வாழ்க்கையின் வரலாறு அத்தகைய பெருமையை கொண்டதே இந்த பிரபஞ்சம் என எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு

34/335:திருக்குறள்-நிலையாமை

நாச்சென்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை மேற்சென்று செய்யப்படும்.நாவடைத்து விக்கல் வருமுன் அறத்தை விரைந்து செய்யவேண்டும்.உடல் நலமின்றி படுக்கையில் கிடந்து நாக்கை அடைத்து கொண்டு விக்கல் வந்து இறக்கும் நிலைக்கு வரமுன் இருக்கும் செல்வங்களை இல்லாதவர்களுக்கு கொடுத்து அறசெயலை புரிந்து புண்ணியத்தை தேடிக்கொள்வதே சிறந்த அறவாழ்வின் பயனாகுமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்

34/334:திருக்குறள்-நிலையாமை

நாளென ஒன்றுபோல் காட்டி உயிர் ஈரும் வாளது உணர்வார்ப் பெறின்.காலம் என்பது நாளன்று அது உயிரறுக்கும் வாள் என அறிவார் காலத்தின் தன்மையறிந்தார்.மனிதர்களின் வாழ்வில் வாழ்க்கையின் காலம் என்பது ஒவ்வொரு வினாடியும்  அவசியமானது அதை அறிந்த மனிதர்கள் வாழ்கின்ற வாழ்வை நெறிப்பட வாழ்ந்து  ஒவ்வொரு நாளையும் கடந்து செல்வார்கள் அந்த நாட்கள் கடந்து செல்லும் போது வாழ்வில் ஒவ்வொரு நாளையும் இழந்து வருவதாக அறிஞர்கள் அறிந்துகொள்வார்கள் என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு  பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.