Posts

35/344:திருக்குறள்-துறவு

குறள்: இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடமை மயலாகும் மற்றும் பெயர்த்து. பொருள்: பற்றனைத்தும் துறப்பதே தவமாகும் பற்றிருப்பது மீண்டும் ஆசைகளை உண்டாக்கிவிடும். கருத்தாக்கம்:மனித வாழ்வினில் பொருட்கள் மீது ஆசையில்லாமல் இருத்தலே துறவறத்தின் நெறியாகும் மனதில் ஆசைகள் உண்டானால் சுகபோக வாழ்வினை நினைத்து மீண்டும் உலகத்தில் மனிதவாழ்வில் ஈடுபடுவதாகுமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

35/343:திருக்குறள்-துறவு

அடல் வேண்டும் ஐந்தன் புலத்தை விடல் வேண்டும் வேண்டிய எல்லாம் ஒருக்கு.ஐம்புல உணர்ச்சிகளையும் அடக்க வேண்டும் அவ்வுணர்ச்சிக்கு உண்டானவற்றையும் துறக்கவேண்டும். மனிதர்களின் வாழ்வுதனில் வாழ்ந்து வளர்கின்ற ஆசைகள் பல அவற்றையெல்லாம் அடக்கி வாழப்பழகவேண்டும் அதுவே சிறந்த வாழ்வியல்.மண், பொன் ,பொருள் ,பெண் ,பதவி ,புகழ் இவற்றையெல்லாம் ஒன்று சேர்த்தே வாழ்த்தவற்றினுள் மறந்து விடுவதே சிறந்த வாழ்வு அதுவே துறவறத்திற்கான சிந்தனையாக வேண்டுமென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

35/342:திருக்குறள்-துறவு

35/342:வேண்டின் உண்டாகத் துறக்க துறைந்தபின் ஈண்டு இயற்பால பல. பெற்ற பொருள்களை உள்ளபோதே துறந்துவிடு அவற்றை துறந்தபின் உண்டாகும் இன்பங்கள் பல.மனிதர்களே உங்கள் வாழ்வில் நீங்கள் பெற்ற செல்வங்களையெல்லாம் நீங்கள் வாழும் காலத்திலேயே அனுபவித்து விடுங்கள் அல்லது உங்களுக்கு விருப்பியவர்களுக்கு கொடுத்து உதவுங்கள் அப்படி உதவும்போது நீங்கள் அனுபவிக்கும் இன்பங்கள் கோடி என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

35/341:திருக்குறள்-துறவு

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன். யார் எந்தெந்த பொருளில் ஆசையை துறந்தாரோ அவர்களுக்கு அந்தந்த பொருளிலனால் துன்பமில்லை.மனிதர்களின் வாழ்வில் ஆசைகள் அதிகம், காணும் பொருட்களையெல்லாம் ஆசைப்படுவது மனிதமனம் அந்த ஆசையில் இருந்து விடுபடும் மனிதர்கள் துன்பமின்றி வாழ்வார்களென எடுத்துரைக்கின்றது திருகுறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம். எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு

34/340:திருக்குறள்-நிலையாமை

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு.உடம்பினுள் குடியிருந்து மாறி மாறி செல்கின்ற உயிருக்கு நிலையான உடம்பு கிடையாது.உயிரினங்களின் உடல்களில் வாழுகின்ற உயிர்கள் உடல் விட்டு உடல் மாறி சென்று வாழ்வதுண்டு ஆனால் உயிருக்கு நிலையான ஒரு உடல் இல்லையென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

34/339:திருக்குறள்-நிலையாமை

உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு.உறக்கம் போன்றது இறப்பு உறங்கி விழிப்பது போன்றது பிறப்பு.மனிதர்களே உங்கள் வாழ்வில் நித்திரை என்பது இறப்பு போலாகும் நித்திரை கலைந்து கண்விழிப்பது என்பது புதிதாக நீங்கள் பிறப்பெடுத்தமாதிரி ஆகும்.ஆதனால் இன்று இருப்பவர்கள் நாளை இருப்பதில்லை இன்றயநாள் மட்டுமே உங்கள் நல்நாள் நீங்கள் உறங்கச்சென்றால் மீள விழித்து கொள்வீர்களா அல்லது நீண்ட உறக்கத்தில் ஆழ்ந்து மரணத்தை தழுவிக்கொள்வீர்களா என்பது மனித வாழ்வில் நிதந்தரமில்லையென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

34/338:திருக்குறள்-நிலையாமை

குடம்பை தனித்து ஒழியப் புள் பறந்தற்றே உடம்போடு உயிரிடை நட்பு.உடலுக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பு கூடு இருக்க அதை விட்டு பறந்து செல்லும் பறவை போன்றது.மனித உடம்பில் வாழ்ந்துகொண்டிருக்கும் உயிருக்கும் உடம்புக்கும் உள்ள தொடர்பு உயிர் உடலை விட்டு நீங்கி விட்டால் மீண்டு அந்த உடலில் உயிர் வாழ்வதில்லை என்பதே ஆகுமென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு