Posts

45/442:திருக்குறள்-பெரியரைத் துணைக்கோடல்

உற்றநோய் நீக்கி உறா அமை முற்காக்கும் பெற்றியார்ப் பேணிக் கொளல்.வந்த துன்பத்தை நீக்கி துன்பம் வருமுன் காக்கும் திறனுடையவரை நட்பாக்கிக் கொள்ளவேண்டும்.இந்த உலகத்தின் மனிதர்களின் வாழ்வுதனில் துன்பங்கள் வருவதுண்டு அத்துன்பத்தை இல்லாது செய்தல் வேண்டும் அத்துடன் துன்பங்கள் துயரங்கள் வரமுன் காக்கும் திறமையுள்ளவர்களை நட்பாக்கி கொண்டால் வாழ்வில் துன்பங்கள் வராமல் தடுக்கலாமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் . எழுதுகோல் வடிவமைப்பு.பாலாஜீ பாலசுப்பிரமணியம். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்

45/441:திருக்குறள் -பெரியரைத் துணைக்கோடல்

அறன்றிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறன்றிந்து தேர்ந்து கொளல். அறமும் முகர்ந்த அறிவும் உள்ளவரது நட்பையே தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டும்.இந்த உலக வாழ்வில் அறமும் நேர்மையும் தர்மநெறிகள் முகர்ந்த அறிவும் தெரிந்தவர்களின் நட்பையே நாடவேண்டும் அது மனித வாழ்விற்கும் நாட்டின் நலனுக்கும் உகந்தது என எடுத்துரைக்கின்றது குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

44/440திருக்குறள்-குற்றங்கடித்தல்

காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் எதில ஏதிலார் நூல்.தன் விருப்பங்களை பிறர் அறியாமல் வாழ்ந்தால் பகைவர் சூழ்ச்சிகள் பயன்படா.மனிதர்கள் தங்களின் மன விருப்பங்களை சமுதாயம் அறிந்து விடாதபடி வாழ்ந்தால் சமுதாயத்தில் சூழ்சிக்காரார்களிடமிருந்து விலகி நல்வாழ்க்கை நடந்தமுடியும் என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்

44/439:திருக்குறள்-குற்றங்கடித்தல்

வியவற்க எஞ்ஞான்றும் தன்னைம நயவற்க நன்றி பயவா வினை.எந்நேரத்திலும் தன்னைத்தானே புகழாதே கெட்ட செயலை எப்பொழுதும் நினைக்காதே. மனிதர்களே உங்களை நீங்களே புகழ்ந்து கொள்ளாதீர்கள் அது சமூகத்தில் சிறப்பை தராது தீய செயல்களையும் மனதில் நினைக்காதீர்கள் அதுவும் உங்கள் வாழ்வியலுக்கு உகந்ததல்ல என எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

44/438:திருக்குறள்-குற்றங்கடித்தல்

பற்றுள்ளம் என்னும் இவற்ன்மை எற்றுள்ளும் எண்ணப் படுவதொன்றன்று. பொருளின் மீது ஆசை கொண்டு வாழும் கஞ்சத்தன்மை எல்லாவற்றிலும் இழிந்தது. செல்வங்களின் மீது ஆசை கொண்டு செலவு செய்யவேண்டிய இடங்களில் செலவு செய்யாது வாழ்கை நடாத்துவது சிறந்த வாழ்வுக்கு இழிவுதரும் செலவு செய்ய வேண்டிய இடங்களில் செலவு செய்து வாழ்வதே மனிதகுலச்சிறப்பாகுமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்

44/437:திருக்குறள்- குற்றங்கடித்தல்

செயற்பால செய்யா திவறியான் செல்வம் உயற்பால தன்றிக் கெடும்.செலவுகளை செய்யாமல் கஞ்சத்தன்மையுடன் வாழ்ந்தால் அவன் செல்வம் தானே அழியும். மனிதர்களின் இல்லறவாழ்வினில் பணத்தை செலவு செய்யாதன்மையை கொண்டு வாழ்கை நாடத்தி வாழ்ந்து வாந்தால் அந்த குடும்பங்களின் செல்வங்கள் தானாக குறைந்து இல்லாமல் போய்விடும் அதனால் செல்வ வசதியுள்ளவர்கள் வரவுக்கு ஏற்ற செலவுகளை செய்து வாழ்வினில் வாழ்ந்தால் உழைத்த செல்வங்களை அனுபவித்து வாழ்ந்த மாதிரியும் இருக்கும் அத்துடன் செல்வம் அழியாது காத்துக்கொள்ளவும் முடியும் என எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

44/436:திருக்குறள்:குற்றங்கடித்தல்

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின் என்குற்றமாகும் இறைக்கு. தான் தவறு செய்யாது பிறர் தவறுகளை சுட்டிக்காட்டிடும் மன்னனை யாரும் குறை கூறார் .அரசாட்சியில் அரசுகள் மக்களுக்கு குற்றம்களையும் குறைகளையும் செய்யாது நல்லாட்சி நடத்திகொண்டு மக்கள் மீது குறைபாடுகளை காணும் அரசாங்கத்தை உலகில் மக்கள் குறை சொல்ல மாட்டார்கள் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்