Posts

50/500:திருக்குறள்-இடன் அறிதல்

காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா வேலாள் முகத்த களிறு. வேல் வீரர்களை கொன்ற யானையை சேற்று நிலத்தில் நரி கொன்று விடும்.வேல் ஏந்திய வேல் வீரர்களையே அடித்து போடக்கூடிய பலம் கொண்ட யானை செற்றில் வீழ்ந்துவிட்டால் தன்னுயிரைக்காப்பாற்ற முடியாமல் நரிகளுக்கே இரையாகிவிடுமென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு  திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு . 

50/499:திருக்குறள்-இடன் அறிதல்

சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர் உறைநிலத்தோடு ஒட்டல் அரிது.எதிரி பாதுகாப்பில்லாத இடத்தில் வாழ்ந்தாலும் அவனை அவன் வாழுமிடத்தில் தாக்க இயலாது.எதிர்ப் படைகளின் கோட்டைகள் பலமில்லாதாயினும் பாதுகாப்பு இல்லாதாயினும் அவர்களின் வாழுகின்ற இடம் சென்று தாக்குதல் செய்வது என்பது இலகுவான செயல்திறன் இல்லையென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு  திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு . 

50/498:திருக்குறள்-இடன் அறிதல்

சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான் ஊக்கம் அழிந்து விடும்.படைவிலிமை குறைந்தவன் தகுந்த இடம் பார்த்து போருக்கு சென்றால் படை வலிமை உடையவனும் அஞ்சுவான்.படைகளின் வலிமை குறைந்தவர்கள் சிறந்த இடம் பார்த்து போருக்கு சென்றால் படைகளின் வலிமையுடன் இருக்கின்ற படைப்பலசாலிகளும் அஞ்சதான் செய்வார்களென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு  திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

50/497:திருக்குறள்- இடன் அறிதல்

அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை எண்ணி இடத்தாற் செயின்.இடமறிந்து ,செயலில் ஈடுபட்டால் ,துணிச்சல் தவிர மற்ற துணைகள் வேண்டா.நல்ல இடமா என அறிந்து செய்ய வேண்டிய செயல்களில் ஈடுபடத்தொடங்கினால் துணிவு இருக்க வேண்டுமே தவிர ஏனைய துணைகள் தேவையற்றவையென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும். 

50/496:திருக்குறள்-இடன் அறிதல்

கடலோடா கால்வல் நெடுங்தேர்  கடலோடும் நாவையும் ஓடா நிலத்து.நிலத்தில் ஓடும் பெரிய வண்டியாக இருந்தாலும் கடலில் ஓடாது, கப்பல் நிலத்தில் ஓடாது. பூமியில் ஓடக்கூடிய எந்த பெரிய வாகனங்களும் கடலில் ஓடவைக்கமுடாது அதேபோல கடலில் மிதக்கின்றன கப்பல்களை பூமியின் தரையில் செலுத்த முடியாது என எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு  திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு . 

50/495:திருக்குறள்-இடன் அறிதல்

நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின் நீங்கின் அதனைப்பிற. தண்ணீரில் உள்ளபோது முதலை எல்லாவற்றையும் வெல்லும் , அது தரையில் உள்ள போது அதை எதுவும் வெல்லும். முதலைக்கு தண்ணீரில் வாழும்போதுதான் சக்தி அதிகம் அதனால் அது எது வந்தாலும் அதை அது வெல்லும் ஆனால் அதே முதலை தரைக்கு வந்தால் தரையில் உள்ள உயிரினங்கள் முதலையை வெல்லுமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும்  பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

50/494:திருக்குறள்-இடன் அறிதல்

எண்ணியார் எண்ணம் இழப்பர் இடன்றிந்து துன்னியார் துன்னிச் செயின்.இடம் கருதி தம் செயலில் உறுதியாக செயல்ப்பட்டால் எதிரிகள் தம் முயற்சியை கைவிடுவர்.சிறந்த இடத்தை மனதில் கொண்டு தங்களின் செயல்ப்பாடுகளை உறுதியுடன் செயலாற்றினால் எதிரிகளும் தங்களின் முயற்சிகளை கைவிடுவார்களென  எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு  திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .