Posts

62/620:திருக்குறள்-ஆள்வினை உடமை

Image
உழைப்பையும் உப்பபக்கம் காண்பர் உலைவன்றித்தாழாது உஞற்றுபவர். மனம் தளராமலும் காலம் தாழ்த்தாதும்  உழைப்பவர்  முயற்சியைக்கண்டு தடையான விதியும் தோல்வியுறும்.ஊழ்வினைபயனை வாழ்வினில் மாற்ற முடியாது என நினைப்பவர்கள் மன உறுதியுடனும் காலத்தையும் சிறந்த சந்தர்ப்பங்களை தவிர்காமலும் விடாமல் முயற்சித்தால் ஊழ்வினை பயனையும் வெற்றிகொள்ளமுடியுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.

62/619:ஆள்வினை உடமை திருக்குறள்

Image
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.ஒரு செயல் தெய்வத்தால் விதிப்பயனின்றி போகுமானாலும் உடல்வருத்திய முயற்சிக்கு கூலி உண்டு.தெய்வத்தை வணங்கியும் கிடைக்காத வரம் மனித உடலை வருத்தி முயற்சித்தால் அதற்கான சம்பளம் என்றுமே தானாக வந்து சேருமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

62/618:திருக்குறள்-ஆள்வினை உடமை

Image
பொய்யன்மை யாருக்கும் பழியென்று அறிவறிந்து ஆள்வினை இன்மை பழி.உடல் ஊனம்  ஒருவர்க்குப்பழியில்லை.அறிய வேண்டியவற்றை அறிந்து தொழில் முயற்சி செய்யாமையே பழி ஆகும்.மனிதர்களுக்கு உடல் ஊனத்தால் பழிகள் எதுவுமில்லை ஆனால் அறிய வேண்டியதை அறிந்து தெரியவேண்டியதை தெரிந்து கொண்டு தொழில்களில் முயற்சிகள் செய்யாது வாழ்வதே பழியாகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம். உலகில் மூத்த மொழி  தமிழ்மொழி உலகெங்கும் சிறந்து விளக்கட்டும் எங்கள் தாய்மொழி.

62/617:திருக்குறள்-ஆள்வினை உடமை

Image
மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான் தாளுளாள் தாமரையிளாள்.சோம்பலுள்ளவனிடத்தில் இருப்பாள் மூதேவி உழைப்பவனிடத்தில் சீதேவி இருப்பாள். சோம்பேறியாக வாழும் மனிதர்களின் வாழ்வில் அமக்கலமானவள்(மூதேவி) குடிகொண்டிருப்பாள் சிறப்பாகவும் சுறுசுறுப்பாகவும் உழைப்பவர்களின் வாழ்நாளில் என்றென்றும் சீதேவியே வீற்றிருப்பாளென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம். உலகில் மூத்த மொழி  தமிழ்மொழி உலகெங்கும் சிறந்து விளங்கட்டும் எங்கள் தாய்மொழி.

62/616:திருக்குறள்-ஆள்வினை உடமை

Image
முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்.முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தை பெருகச் செய்யும் முயற்சியின்மை வறுமையை கொடுக்கும்.முயற்சி செய்தவர்களுக்கு செல்வம் பெருக கூடும் முயற்சியே இல்லாதவர்களுக்கு வாழ்கையில் வறுமையே வந்து நிலை கொண்டிருக்க முடிவு செய்து விடுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம். உலகில் மூத்த மொழி  தமிழ்மொழி உலகெங்கும் சிறந்து விளங்கட்டும் எங்கள் தாய்மொழி.

62/615:திருக்குறள்-ஆள்வினை உடமை

Image
இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர் துன்பம் துடைத்தான்றும் தூண்.இன்பம் விரும்பாது செயல் முடிப்பதையே விரும்புபவன் தன் உறவினரின் துன்பம் தாங்கும் தூணையாவான். சுயநலமில்லாமல் செய்யவேண்டிய செயல்களை திறன்பட செய்து முடிக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் தங்களின் உற்றார் உறவினர் சமுதாயத்தின் துன்ப துயரங்களை தாங்கி உதவி புரியும் துணையாவர்களென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

62/614:திருக்குறள்- ஆள்வினை உடமை

Image
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை வாளாண்மை போலக்கெடும்.முயற்ச்சியில்லாதவன் யாவர்க்கும் உதவ முயலுவது பேடி பகைவர் முன் வாள் வீச முயல்வது போன்றதாகும்.முயற்சியே இல்லாதவர்கள் மற்றவர்களுக்கு உதவ நினைப்பது ஒரு கோழை வீரனுடன் சண்டையிட்டு வெற்றியை பெற நினைப்பது போலாகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.