Posts

72/720:திருக்குறள் -அவை அறிதல்

Image
அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தர் அல்லார் முன் கோட்டி கொளல் .அறிவால் தன்னைவிட எளியவர் நிறைந்த அவையில் பேசுவது சாக்கடையில் கொட்டிய அமிழ்து போன்றதாகும்.அறிவுமிக்கவர் அவரை விட அந்த அவையில் அறிவில்லாதவர்களினால் சூழப்பட்டுள்ளது போது அவர் அங்கே பேசுகையில் அது சுத்தமற்ற வாய்காலில் போட்ட அமிர்தம் போல் ஆகிவிடுமென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

72/719:அவை அறிதல் திருக்குறள்

Image
புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள் நன்கு செலச்சொல்லுவார்.நல்லவர் அவையில் நல்ல பொருள்களை சொல்ல வல்லவர் அறிவிலார் கூட்டத்தில் மறந்தும் தவறாக சொல்லுதல் கூடாது.கற்றவர்களின் சபையில் சிறந்தவைகளை எடுத்துரைக்கும் திறன் படைத்தவர்கள் அறிவில்லாதார் நிறைந்த இடத்தில் மறந்தும் கூட பிழையாக பேசுதல் கூடாதென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

72/718:அவை அறிதல் திருக்குறள்

Image
உணர்வ துடையார் முன் சொல்லல் வளர்வதன் பாத்தியுள் நீர்சொறிந் தற்று . உணர்ந்தறியும் தன்மை உடையார் முன் கூறுவது பயிர் நின்ற பாத்தியில் நீர் பாய்ச்சுவது போலாகும்.புரிந்து கொள்ளக்கூடிய மனிதர்களின் முன்னிலையில் பேசுவது பாத்தியில் உயர்ந்து வளரக்கூடிய தாவரங்களுக்கு தண்ணீர் ஊற்றுவது போலாகுமென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

72/717அவை அறிதல் திருக்குறள்

Image
கற்றறிந்தார் கல்வி விளக்கும் கசடறச் சொல்தெரிதல் வல்லாரத்து. தெளிவாக சொற்பொருள் அறியவல்லவர் நிறைந்த அவையில் கற்றவர்தம் கல்வி மேன்மை அடையும்.சிறந்த சொற்களை தேர்ந்தெடுத்து மாபெரும் சபைகளில் பேசும் கல்வியாளர்களின் கல்வி சிறந்த அறிவாளர்களின் சபைதனில் மேன்மை பெறுமென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

72/716:திருக்குறள்-அவை அறிதல்

Image
ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம் ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு.நூற்பொருளை கற்று அறிந்தவர் முன் சொற்குற்றப்படுதல் ஒழுக்க நெறியில் நிலை தவறி வீழ்ந்தது போலாகும்.அறிவின் திறனால் புகழ் பெற்றவர்கள் முன்நிலையில் பேசும்போது குறை எதாவது வருமாயின் அது ஒழுங்கு நெறிகளில் தேர்ச்சி இல்லாது நிலைகுலைந்து தவறி வீழ்ந்தது போலாகுமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

72/715:திருக்குறள்-அவை அறிதல்

Image
நன்றைன்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள் முந்து கிளவாச் செறிவு.அறிவுடையோர் அவையில் முந்திக்கொண்டு எதையும் கூறாத அடக்கம் மிக நல்ல குணம். அறிவாளிகளின் மாபெரும் சபைகளில் அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் முதலில் முந்திக்கொண்டு பேசாமல் இருப்பதே சிறந்த மனிதர்களின் வாழ்வியல் சிறப்பாகுமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

72/714:அவை அறிதல் திருக்குறள்

Image
ஒளியார் முன் ஒள்ளிய ராதல் வெளியாரமன் வான்கதை வண்ணம் கொளல்.அறிவுடையார் முன் அறிவுடையவராக பேசுதல் வேண்டும் அறியாதவர் முன் பேதை போல் பேசுதல் வேண்டும்.அறிவாளிகள் முன்னிலையில் அறிவோடு அறிவாளிகள் போல பேசுதல் சிறப்பாகும் அறிவில்லாதவர்கள் முன்பு அறிவில்லாத மாதிரியே பேசுதல் சிப்பாகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.