72/715:திருக்குறள்-அவை அறிதல்
திருக்குறள்:
நன்றைஎன்ற அவற்றுள்ளும் நன்றே, முதுவருள்
முந்து கிளவாச் செறிவு. (குறள் 715 - அதிகாரம்: அவையறிதல்)
பொருள்:
அறிவிலும் வயதிலும் முதிர்ந்த சான்றோர் நிறைந்த சபையின் முன்னால், தாமே முந்திக்கொண்டு தம்பட்டம் அடித்துக்கொண்டு பேசாமல், அடக்கத்துடன் அமைதியாக இருத்தலே நற்குணங்கள் எல்லாவற்றிலும் மிகச் சிறந்த நற்குணமாகும்.
விரிவாக்கம்:
ஒரு சபையில் பல அறிஞர்கள் வீற்றிருக்கும்போது, முதியவர்களும் பேரறிவாளர்களும் இருக்கும் இடத்தில் நாம் முந்திக்கொண்டு தாறுமாறாகப் பேச முற்படக் கூடாது. மற்றவர்கள் கருத்துக்களைச் செவிமடுத்துக் கேட்க வேண்டும்; உரிய நேரம் வரும் வரை அமைதியாகவும் அடக்கமாகவும் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட அடக்கமும் பொறுமையும் தான் ஒரு மனிதனின் கல்விக்கு அழகு சேர்க்கும் மிகச் சிறந்த பண்பாகும் என்று வள்ளுவர் எடுத்துரைக்கிறார்.
English Translation:
Thirukkural:
Nandrai Enra Avaiyullum Nandre, Muthuvarul
Munthu Kilavaach Cherivu.
Meaning:
Even among virtues considered good, the highest is the self-restraint of not speaking prematurely before the aged and wise.
Explanation:
Valluvar emphasizes that among all commendable traits, the greatest is the disciplined modesty of holding back and not rushing to speak in the presence of venerable, learned elders until one is appropriately called upon.
— தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும். பாலாஜி பாலசுப்பிரமணியம்.
[God to man is Gita; Man to God is Thiruvasagam; Man to man is Thirukkural].
"தாய்மொழியைப் போற்றி வீழ்ந்த நாடும் இல்லை; தாய்மொழியைப் புறக்கணித்து வாழ்ந்த நாடும் இல்லை."

Comments