Posts

77/770:திருக்குறள்-படைமாட்சி

Image
நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை தலைமக்கள் இல்வழி இல்.போரில் பின் வாங்காத வீரர் அதிகம் உடையதாயினும் தலைவர் இல்லாப் படை நிலைபெறாது.வீரம் செறிந்த படைவீரர்கள் படையில் இருந்தாலும் சிறந்த படைத்தலைவர்கள் இல்லாத படைகள் என்றென்றும் வெற்றிபெறாதென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

77/769:திருக்குறள்-படைமாட்சி

Image
சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும் இல்லாயின் வெல்லும் படை.படை அளவில் சுருங்குதலும் தலைவரிடம் நீங்காத வெறுப்பும் வறுமையும் இல்லையாயின் அது பகைவரை வெல்லும்.சிறுத்து கொண்டு போகாத படையும் தலைவனின் வெறுப்புக்கு உட்படாத படையும் களத்தில் வறுமையின்மையும் இந்த படை தேவையில்லை என்ற நிலை உருவாகாத படையே போர்களத்தில் எதிரிப்படைகளை என்றென்றும் வெல்லுமென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

77/768:திருக்குறள்-படைமாட்சி

Image
அடற்றகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை படைத்தகையால் பாடு பெறும்.கொல்லுதற்கும் தடுத்தற்குமான திறமை படைக்கு இல்லையாயினும் தன் தோற்றத்தால் பகைவரை அஞ்ச செய்து பெருமையுரும்.எதிரிபடைகளை எதிர்க்கின்றன திறன் சண்டையிடும் போர்த்தந்திரம் இல்லாவிடினும் படைகளின் கோர தோற்றத்தால் எதிரிபடைகள் பயத்தோட செய்வதே பெருமைதருமென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

77/767:திருக்குறள்-படைமாட்சி

Image
தாரதாங்கிச் செல்வது தானை தலைவந்த போர்தாங்கும் தன்மை யறிந்து. தன் மீது வராமல் தடுத்து தான் அதன் மீது செல்வதே படையாகும். எதிரிப்படைகள் தாக்காதவாறு தக்கபதிலடியை கொடுத்து அவர்களை வீழ்த்திய பின் அவர்களின் ஆயுதங்களுடன் அவர்களின் மீது பாரிய தாக்குதல்களை தொடுப்பதே சிறப்பு படையாகுமென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

77/766:திருக்குறள்-படைமாட்சி

Image
மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் என நான்கே ஏமம் படைக்கு. வீரம் மானம் முந்தைய வீரர் வழிச் செல்லுதல் அரசால் நம்பப்படுதல் ஆகிய நான்கும் படைச்செருக்குச் சிறந்தவை. நாட்டுப்பற்று வீரம் செறிந்த வீரச்செயல்கள் சிறப்பு தளபதிகளின் வழிகளை பின்பற்றுதல் அரசின் இரகசிய ஆவணங்களை பாதுகாத்து நாட்டின் நம்பிக்கை அடைத்தல் ஆகியவை இருந்தால் நாட்டின் சிறப்புபடைகான திறனை பெற்றுக்கொள்ள தகுதியான படையாக மதிக்கப்படுமென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

77/765:திருக்குறள்-படைமாட்சி

Image
கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும் ஆற்றலதுவே படை. காலனே எதிர்த்து போர் செய்ய வந்தாலும் அவனை எதிர்த்து தடுக்கும் வல்லமையுடையதே படை எனப்படும் .படையில் அனைவருமே இறங்க நேர்த்தாலும் தயங்காத வீரத்தோடு எதிரிப்படைகளுடன் போரிட்டு திறமையுடன் எதிரிகளை எதிர்க்கும் படையே சிறந்த படை என உலகில் வர்ணிக்கப்படுமென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

77/764:திருக்குறள்-படைமாட்சி

Image
அழிவின்று அறபோகா தாகி வழிவந்த வன்கணதுவே படை.போரில் வென்று அழிக்க முடியாத பகைவரால் அடிமைப்படுத்த முடியாத பழமை படையே அரசனுக்கு படையாம்.எந்த போரையையும் வெல்ல கூடிய படையாகவும் அழித்தொழிக்க முடியாத வீரம் செறிந்த படையாகவும் அடிமைபடுத்தி சிறைப்பிடிக்க முடியாத படையே அரசாங்கத்துக்கு சிறந்த படையாகுமென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .