Posts

82/820:திருக்குறள்-தீ நட்பு

Image
எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ மன்றில் பழிப்பார் தொடர்பு. வீட்டினுள் நட்பாயிருந்து அம்பலத்தில் பழிப்பாருடைய நட்பை தடுத்தல் வேண்டும் .வீட்டுக்குள் சிறந்த நட்புறவாக பழகிக்கொண்டு பொது இடங்களில் பலவீனமாக பேசும் நட்பை விட்டுவிடுவதே சிறப்பாகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

82/819:திருக்குறள்-தீ நட்பு

Image
களவினும் இன்னாது மன்னோ வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு.சொல்வது வேறு செய்வது வேறாய் இருப்பாரது நட்பானது கனவிலும் துன்பம் தரும்.சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக இருப்பினும் அந்த நட்பின் செயல்கள் படுத்து உறங்கும் போது கனவு வந்தால் கூட துன்பமான கனவாகவே இருக்குமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

82/818:திருக்குறள்-தீ நட்பு

Image
82/818:ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல்லாடார் சோர விடல்.தம்மால் முடியும் காரியத்தை செய்ய விடாமல் தடுப்பாரின் நட்பை சொல்லாமல் தளர விடுக.எங்களால் முடியுமென்று முயற்சியெடுத்து நிறைவேற்றும் விடயங்களை செய்யவிடாது தடுத்து நிறுத்தும் நட்பினை அவர்களுக்கு தெரியாமலே மெல்ல மெல்ல விட்டு விடுவது வாழ்வியலுக்கு என்றென்றும் சிறப்பென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

82/817:திருக்குறள்-தீ நட்பு

Image
82/817:நகைவகைய ராகிய நட்பின் பகைவரால் பத்தடுத்த கோடி உறும்.சிரித்து விளையாடுவதற்கு மட்டும் செய்வாருடைய நட்பை விட பகைவரால் வரும் துன்பம் கோடி மடங்கு நல்லனவாகும்.முகத்துக்காக முன் சிரித்து போகவிட்டு புறன் பேசும் நட்புகளை விட கோபக்காரர்களாக இருந்தாலும் அவர்களிடமிருந்து கிடைக்கின்ற துன்ப துயரங்கள் மேன்மையானவையென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

82/816:திருக்குறள்-தீ நட்பு

Image
82/816:பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார் ஏதின்மை கோடி உறும்.அறிவற்றவனின் நெருங்கிய நட்பை விட அறிவுடையவரின் பகைமை கோடி மடங்கு நல்லது.அறிவு இல்லாதவர்களிடம் நட்புறவு கொண்டிருப்பதை விட அறிவு உள்ளவர்களிடத்தில் பகைகள் கோடியிருந்தாலும் அதுவே சிறந்த நட்பாகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

82/815:திருக்குறள்-தீ நட்பு

82/815:செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை எய்தலின் எய்தாமை நன்று.பாதுகாப்பு கருதி நட்பு செய்தாலும் காவலுக்கு பயன்படாத அந்தநட்பு இருப்பதை விட கைவிடல் நன்று.எங்களுக்கு துன்ப துயரங்கள் வரும் போது பாதுகாப்பு அழிக்காத நட்பை நட்பாக ஏற்றுக்கொள்ளாது விட்டுவிடுவதே சிறப்பாகுமென திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

82/814:திருக்குறள்-தீ நட்பு

Image
82/814: அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார் தமரின் தனிமை தலை. போரிலே ஏறியவரை கீழே தள்ளிவிட்டு போகும் குதிரையைப்போல துன்ப காலத்தில் விலகி விடும் நட்பை விட தனித்திருந்தல் சிறப்பு.சண்டை நடக்கும்போது குதிரையில் ஏறியமர்ந்தவரை குதிரை கீழே தள்ளிவிட்டு ஓடிச்செல்வது போல துன்ப துயர காலங்களில் சிறந்த நட்புறவை விட்டு விலகி செல்லும் நட்பை  விட தனித்து வாழ்வதே சிறப்பென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும். எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.