Posts

100/1000:திருக்குறள்-பண்புடைமை

பண்பிலான் பெற்ற பெருஞ்செல்லவம் நன்பால் கலந்தீமை யால்திரிந் தற்று.தீயவன் பெற்ற பெரும் செல்வம் பால் அது வைக்கப்பட்ட பாத்திரத்தின் கெடுதியால் கெடுதல் போலாகும்.சுத்தமில்லாத பாத்திரத்தில் பாலை ஊற்றி வைத்தால் பால் கெட்டு விடுவதுபோல் தீயவர்களுக்கு கிடைத்த செல்வங்களும் பயன் இல்லாமல் போய்விடுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

100/999:திருக்குறள்-பண்புடைமை

நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம் பகலும்பாற் பட்டன்று இருள். எவருடனும் சிரித்துப் பழகத் தெரியாதவர்க்கு இவ்வுலகம் பகலிலும் இருளாகும்.மனிதர்களுடன் சிரித்து பேசத்தெரியாத மனிதர்களுக்கு இந்த உலகம் பகலாக இருந்தாலும் அது அவர்களுக்கு இருட்டாகவே இருக்குமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

100/998:திருக்குறள்-பண்புடைமை

நண்பாற்றா ராகி நயமில செய்வார்க்கும் பண்பற்றா ராதல் கடை.நட்புக்கொள்ளாமல் தீமை செய்வாரிடத்து பண்புடன் பழகாமை இழிவாகும்.உற்றார் உறவினர் நன்பர்கள் இடத்தில் நட்பு பாராட்டாமல் தீமைகளையே செய்பவர்களிடத்தில் பண்புடனும் பணிவுடனும் உறவு கொள்ளாமை வாழுகின்ற வாழ்கையில் சிறப்பளிக்காதென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜி பாலசுப்பிரமணியம். எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

100/997:திருக்குறள்-பண்புடைமை

அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கட்பண்பு இல்லா தவர். அரம் போன்ற கூரிய அறிவுடையவராக இருந்தாலும் மனிதத் தன்மை இல்லாதவர் மரத்திற்கு ஒப்பாவார்.என்னதான் புத்திசாலிகளாக வாழ்ந்தாலும் மனிநேயமும் மனிதத்தன்மைகளும் இல்லாத மனிதர்கள் மரத்துக்கே நிகராவர்கள் மனிதர்களாக வாழ்த்தால் மனிதநேயத்துடன் வாழவேண்டுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

100/996:திருக்குறள்-பண்புடைமை

பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அது இன்றேல் மண்புக்கு மாய்வது மன்.உலகம் பண்புடையார் ஒழுக்கத்தால் வாழ்கின்றது அஃதில்லாவிடின் அழிந்து போயிருக்கும்.இந்த உலகை வழிநாடாத்துவதற்கு சிறந்த பண்புடைய மனிதர்களால்தான் முடியும் அப்போதுதான் இந்த சமுதாயம் சிறப்புற வாழும் வாழவும்முடியுமென்றும் அப்படி இல்லாத உலகத்தால் இதுவரை நிலைத்திருக்கமுடியாதென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம். தாய்மொழியைப் போற்றி வீழ்ந்த நாடுமில்லை.தாய்மொழியைப் புறக்கணித்து வாழ்ந்த நாடுமில்லை.

100/995:திருக்குறள்-பண்புடைமை

நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும் பண்புள பாடறிவார் மாட்டு. விளையாட்டிற்குங் கூட ஒருவரை இகழ்தல் கூடாது. பகைவரிடத்தும் பாராட்டும் குணமே பண்பாளிரிடம் காணப்படும்.சமுதாயத்தில் வாழும் மனிதர்கள் ஒரு பேச்சுக்குகூட இன்னொரு மனிதர்களைப்பற்றி கூடாமல் பேசக்கூடாது எதிரிகளாக இருந்தாலும் சிறந்த வழியில் பாராட்டி பேசுவதே சிறந்த பகுந்தறிவாளர்களின் குணமாக இருந்தல் வேண்டுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம். தாய்மொழியைப் போற்றி வீழ்ந்த நாடுமில்லை.தாய்மொழியைப் புறக்கணித்து வாழ்ந்த நாடுமில்லை.

100/994:திருக்குறள்-பண்புடைமை

நயனொடு நன்றி புரிந்த பயனுடையார் பண்புபாராண்டும் உலகு. முறையுடன் நன்மையை உலகித்திற்கும் தனக்கும் கருது வாருடைய குணத்தை உலகம் போற்றும்.நீதி நேர்மையுடன் சமுதாயத்தில் வாழ்வினை வாழ்ந்து காட்டு மனிதர்கள் இந்த உலகம் பாராட்டுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம். தாய்மொழியைப் போற்றி வீழ்ந்த நாடுமில்லை.தாய்மொழியைப் புறக்கணித்து வாழ்ந்த நாடுமில்லை.