100/997:திருக்குறள்-பண்புடைமை

திருக்குறள்:

அரம் போன்ற கூர்மையரேனும் மரம்போல்வர்,

மக்கட்பண்பு இல்லாதவர். (குறள் 997 - அதிகாரம்: பண்புடைமை)

பொருள்:

அரத்தைக் காட்டிலும் மிகவும் கூர்மையான அறிவுடையவராக விளங் கினாலும், மக்களுக்கே உரிய நற்பண்பு இல்லாதவர்கள் மரத்திற்குச் சமமானவர்களாவர்.

விரிவாக்கம்:

கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கி, அரத்தைப் போல கூர்மையான புத்திசாலித்தனத்தையும் நுட்பமான அறிவையும் ஒருவன் பெற்றிருக்கலாம். ஆனால் அவனிடம் பிறரிடம் இரக்கம் காட்டும் மனிதநேயமோ, மனிதப் பண்போ இல்லாவிட்டால், அவன் மனிதனாக வாழ்வதில் எந்தப் பயனும் இல்லை. உயிரற்று, யாரிடமும் அன்பு காட்டாமல் அசையாமல் நிற்கும் மரத்திற்குத்தான் அவனைச் ஒப்பிட முடியும். அறிவைவிட உயர்ந்தது நல்ல பண்பும் மனிதநேயமும்தான் என்பதை வள்ளுவர் இக்குறளில் ஆணித்தரமாக எடுத்துரைக்கிறார்.

English Translation:

Thirukkural:

Arampolum Koorumaiya Renum Marampolvar,

Makkatpanpu Illa Thavar.

Meaning:

Though men may be as sharp-witted as a file, those who lack human courtesy and character are no better than trees.

Explanation:

Valluvar asserts that intellectual sharpness and academic brilliance alone do not make a true human being. If a person lacks the essential virtues of empathy, kindness, and good character towards fellow beings, their intelligence is of little worth; they are as lifeless and unresponsive to human values as a block of wood. Noble character is the true measure of humanity.

— Daily a Kural, Meaning, and Explanation. Balaji Balasubramaniam.

God to man is Gita; Man to God is Thiruvasagam; Man to man is Thirukkural.

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்