Posts

117/ 1170: படர் மெலிந்திரங்கல்

உள்ளம்போன்று உள்வழி செல்கிற்பின் வெள்ளநீர் நீந்தல மன்னோஎன் கண். அவர் இடத்துக்கு என் மனம் போவதுபோல் என் கண்களும் சென்றால் கண்ணீரில் நீந்த மாட்டேன்.நினைத்வரின் இடத்துக்கு இதயம் சென்று அவரை நினைப்பது போல விழிகளும் சென்று அவரைக்கண்டால் அழுது கண்ணீர் கடலில்நீந்தமாட்டேன் என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.

117/ 1169: படர் மெலிந்திரங்கல்

கொடியார் கொடுமையின் தம்கொடிய இந்நாள் நெடிய கழியும் இரா. இப்போது நேரமாகி விடியும் இரவுகள் பிரிந்த தலைவரை விட கொடுமையானவை.இப்வெல்லாம் நீண்ட நேரம் சென்றே இரவுகள் விடிகின்றன இப்படி விடிவாதால் பிரிந்து சென்ற கணவனை விட கடுமையான இரவுகளாக காட்சியளிக்கின்றன என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.

117/ 1168: படர் மெலிந்திரங்கல்

மன்னுயி ரெல்லாம் துயிற்றி அளித்திரா என்னல்லது இல்லை துணை. எல்லா உயிரையும் தூங்கச் செய்யும் இரவிற்கு என்னை தவிர வேறு துணை இல்லை.உலகில் வாழும் அனைத்து உயிர்களையும் உறங்க வைத்த இரவு என்னை உறங்க வைக்கமுடியவில்லை நானும் இல்லையென்றால் என்னை தவிர வேறு துனை உனக்கு இல்லையென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.

117/ 1167: படர் மெலிந்திரங்கல்

காமக் கடும்புனல் நீந்தீக் கரைகாணேன் யாமத்தும் யானே உளேன். காம வெள்ளத்தில் நீந்தி கரை காணாமல் நள்ளிரவிலும் விழித்துள்ளேன். அதிக உடல் ஆசையால் துணையின்றி மடலேறி காமக்கடலை நீந்திக்கரை காணமலே இரவுநேரங்களில் உடல் ஆசை கொண்டு நித்திரை கொள்ளாது பல தடவைகள் விழித்து அவதிப்பட்டிருக்கிறேனென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.

117/ 1166: படர் மெலிந்திரங்கல்

இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால் துன்பம் அதனிற் பெரிது. காம இன்பம் கடலாகும் காமம் வருத்தும் போது கடலினும் பெரிதாகும். காம ஆசை கடல் போன்றது அதே ஆசை அதிகமாகும்போது கடலை விட பெரிதாகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.

117/ 1165: படர் மெலிந்திரங்கல்

துப்பின் எவனாவர் மற்கொல் துயர்வரவு நட்பினுள் ஆற்று பவர். உறவினருக்கு துயரத்தைக் கொடுப்பவர் பகைவர்க்கு என்ன தான் செய்யமாட்டார். குடும்ப உறவுகளுக்கே துன்ப துயரங்களை கொடுக்க விரும்பும் மனிதர்கள் எதிரிகளுக்கு என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.

117/ 1164: படர் மெலிந்திரங்கல்

காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும் ஏமப் புணைமன்னும் இல். காமக்கடல் உண்டு அதனைக் கடக்க நல்ல தெப்பந்தானில்லை.அதிகமான காம ஆசை உடலில் உண்டு ஆனால் அந்த ஆசை மடல் ஏறி தீர்த்துக்கொண்டு கடந்து செல்ல சிறந்த மடல்தானில்லையென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.