Posts

121/1205: நினைந்தவர் புலம்பல்

தந்நெஞ்சத்து எம்மைக் கூடிகொண்டார் நாணார்கொல் எந்நெஞ்சத்து ஓவா வரல். அவர் மனதில் நம்மை விரும்பாதபடி காத்துக் கொள்பவர் நம் மனதில் ஓயாது வருவதற்கு நாண மாட்டாரோ? ஆண் இதயத்தில் பெண்ணுக்கு இடமளிக்காதவர் பெண் இதயத்துக்குள் மட்டும் இடைவெளியின்றி வந்து போவதற்கு மனதில் கொஞ்சம்கூட வெட்கப்படமாட்டாரா? என எடுத்துரைக்கின்றது திருக்குறள் .

121/1204: நினைந்தவர் புலம்பல்

யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து ஒஒ உளரே அவர்.நம் உள்ளத்தில் அவர் எப்போதும் இருக்கிறார் அதுபோல அவர் உள்ளத்தில் நாம் இருக்கின்றோமா? ஆண் காதலர் இதயத்தில் பெண் காதலர் இருப்பது போல பெண்காதலர் இதயத்தில் ஆண் காதலர் இருப்பாரா ? என எடுத்துரைக்கின்றது திருக்குறள் .

121/1203: நினைந்தவர் புலம்பல்

நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல் சினைப்பது போன்று கெடும். எனக்கு தும்மல் தோன்றுவது போல் காணப்பட்டு இல்லையாகின்றது அதுபோல் காதலர் என்னை நினைப்பவர் போன்று நினையாமலிருக்கின்றார்.ஆணுக்கு அல்லது பெண்ணுக்கு தும்மல் வருவது போல தோன்றி வராமல் விட்டு விடுகின்றது அதேபோல காதலித்த பெண்ணோஅல்லது ஆணோ நினைப்பவர்போல நினைக்காமலே இருக்கின்றாரா என எடுத்துரைக்கின்றது திருக்குறள் .

121/1202: நினைந்தவர் புலம்பல்

எனைத்தொன்றும் இனி தேகாண் காமம்தாம் வீழ்வார் நினைப்ப வருவதொன்று இல். தான் விரும்பியவரை நினைத்தால் துன்பமென்று ஒன்றில்லை எனவே காதல் குறுகிய காலத்தாயினும் இனிது.ஆண்அல்லது பெண் நினைத்தவரை விரும்பியதில் எந்த துன்பமும் என்றுமில்லை அதனால் காதலில் கொஞ்ச காலமாக இருந்தாலும் அந்த காதல் இனிதென எடுத்துரைக்கின்றது திருக்குறள் . தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் . பாலாஜி பாலசுப்பிரமணியம்.

121/1201: நினைந்தவர் புலம்பல்

Image
உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால் கள்ளினும் காமம் இனிது. கள்ளைஅருந்தி பொழுது மட்டுமே இன்பம் தரும் ஆனால் முன்பு பெற்ற இன்பம் பிரிவின் போது நினைத்தாலும் இன்பம்தரும் எனவே கள்ளைவிட காமம் இனிது. மது அருந்தினால் அந்த நேரம் மட்டுமே இன்பம் தரும் ஆனால் முன் பெற்ற சிற்றின்பம் பிரிந்த பின்னும் நினைக்க நினைக்க இனிய இன்பம் தருமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.

120/1200:தனிப்படர் மிகுதி

உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச் செறாஅஅய் வாழிய நெஞ்சு.மனமே கடலை வெறுக்காமல் நீபட்ட துன்பத்தை துன்பப் படாதவற்கு தூதாகச் சொல் . இதயமே கடல் நீரை வெறுத்து ஒதுக்காதே நீ கொண்ட துயரை வெறொருவர் படுவதற்குள் கடல் அலையை தூதாக அனுப்பி நடத்ததை கூறு என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.

120/1199:தனிப்படர் மிகுதி

நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு இசையும் இனிய செவிக்கு. காதலர் இன்பம் தரவில்லையாயினும் அவரைப் பற்றிக் கூறும் புகழ் சொல்கள் காதலிக்க இன்பம்.பெண் காதலித்த ஆண் காதல் இன்பம் தரவில்லையென்றால் அந்த ஆணை பற்றிக் சொல்லும் உயர்வான சொற்கள் காதலில் இன்பம் தரவேண்டும் அந்தோடு அவரின் பேச்சுகள் அனைத்தும் காதலித்த பெண்ணின் செவிக்கு இனிதேயென எடுத்துரைக்கின்றது திருக்குறள்