25/244:திருக்குறள்-அருளுடைமை

மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை.உயிர்களிடம் கருணைகொண்டு அன்பு செலுத்துபவர் தன் உயிர் அச்சுமளவிற்கு என்றும் பாவச் செயல்களைச் செய்யமாட்டார்.இந்த பூமியில் வாழுகின்ற உயிரினங்களையெல்லாம் அன்பாகவும் கருணையாகவும் சிறந்த பண்புடனும் தங்களின் உயிரை போல் காத்து நல்லொழுக்கத்துடன் வாழுகின்ற மனிதர்களுக்கு  தங்களின் உயிருக்கு மற்றைய உயிரினங்களால் தீங்கு வந்து தாங்கள் இறந்துபோகக் கூடும் என்ற அச்சம் வாழ்வினில் என்றுமே இருக்காது அதனால் நல்லவர்கள் பிற உயிர்களுக்கு துன்பம் தந்து வாழமாட்டார்கள் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.




Comments