28/271:திருக்குறள்-கூடா ஒழுக்கம்
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்.வஞ்சக மனம் படைத்தவனது தீய ஒழுக்கத்தை பிறர்அறிய வில்லையாயினும் தன்னுள் மறைந்திருக்கும் ஐம்பூதங்களும் கண்டு நகைக்கும்.வஞ்சகமான மனிதர்களின் பொய்யான ஒழுக்கத்தை ஏனைய மனிதர்கள் வாழ்வினில் புரிந்து கொள்ள விட்டாலும் வஞ்சகமனிதர்களின் உடம்புகுள் குடியிருக்கும் ஐந்து பூதங்களும் அவர்களின் செயல் கண்டு தங்களுக்குள்ளேயே சிரித்து மகிழும் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .
Comments