79/788:திருக்குறள்-நட்பு








திருக்குறள்:

உடுக்கை இழந்தவன் கைபோல, ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு. (குறள் 788 - அதிகாரம்: நட்பு)

பொருள்:

உடுத்திய ஆடை எதிர்பாராமல் நழுவி விழும்போது, அதனை உடனே காக்கக் கைகள் விரைந்து செல்வது போல, நண்பனுக்குத் துன்பம் வந்த இடத்து, தாமதிக்காமல் சென்று அந்தத் துன்பத்தைப் போக்குவதே உண்மையான நட்பாகும்.

விரிவாக்கம்:

உண்மையான நட்புக்கு மிகச் சிறந்த உதாரணமாக வள்ளுவர் உடலையும் கைகளையும் ஒப்பிடுகிறார். ஒருவனுக்குச் சபையில் ஆடை நழுவும் போது மானம் காக்கக் கை எப்படித் தானாக, உடனடியாகச் செயல்படுகிறதோ, அதேபோல நண்பனுக்கு ஒரு ஆபத்து அல்லது துன்பம் நேர்ந்தால், காரணத்தைக் கேட்காமல் உடனடியாக ஓடிச்சென்று உதவி செய்வதே உயர்ந்த நட்பின் இலக்கணமாகும் என்று எடுத்துரைக்கிறார்.

English Translation:

Thirukkural:

Udukkai Ilandhavan Kaipola, Aange

Idukkan Kalaivathaam Natpu.

Meaning:

True friendship is like the hand of one whose garment is slipping, which instantly hastens to catch and secure it to remove the distress.

Explanation:

Valluvar beautifully illustrates that just as one's hand automatically and immediately moves to adjust and secure a falling garment, a true friend rushes instantaneously to alleviate a companion's troubles without a moment's delay.

— தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும். பாலாஜி பாலசுப்பிரமணியம்.

[God to man is Gita; Man to God is Thiruvasagam; Man to man is Thirukkural].

"தாய்மொழியைப் போற்றி வீழ்ந்த நாடும் இல்லை; தாய்மொழியைப் புறக்கணித்து வாழ்ந்த நாடும் இல்லை."

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்