79/787:திருக்குறள்-நட்பு
திருக்குறள்:
அழிவின வைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு. (குறள் 787 - அதிகாரம்: நட்பு)
பொருள்:
நண்பனுக்கு வரும் கெடுதிகளை நீக்கி, அவனை நல்வழியில் செலுத்தி, அவனுக்குத் துன்பம் வந்த காலத்தில் தானும் அவனுடன் கூட நின்று அந்தத் துன்பத்தைப் பகிர்ந்து அனுபவிப்பதே உண்மையான நட்பாகும்.
விரிவாக்கம்:
உண்மையான நண்பன் என்பவன் இன்பத்தில் மட்டும் பங்கு கொள்பவன் அல்ல; மாறாக, நண்பன் வாழ்வில் வரும் தீமைகளைத் தடுத்து அவனை நேர்வழியில் நெறிப்படுத்துபவன் ஆவான். ஒருவேளை அவனுக்குத் தவிர்க்க முடியாத துன்பம் நேர்ந்தால், அவனைத் தனியாக விட்டுவிடாமல், அவனுடன் தாமும் இணைந்து அந்தத் துயரத்தைப் பகிர்ந்து தாங்கிக் கொள்வதே உன்னதமான நட்பின் இலக்கணம் என்று வள்ளுவர் எடுத்துரைக்கிறார்.
English Translation:
Thirukkural:
Azhivinai Vaineekki Aatruyithu Azhivinkan
Allal Uzhappathaam Natpu.
Meaning:
True friendship consists in removing a friend from ruin, guiding him in the right path, and sharing his grief by suffering alongside him when adversity strikes.
Explanation:
Valluvar highlights that a true friend not only protects you from destruction and guides you toward righteousness, but also stands by you through thick and thin, willingly sharing your burdens and sorrows in times of distress.
— தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும். பாலாஜி பாலசுப்பிரமணியம்.
[God to man is Gita; Man to God is Thiruvasagam; Man to man is Thirukkural].
"தாய்மொழியைப் போற்றி வீழ்ந்த நாடும் இல்லை; தாய்மொழியைப் புறக்கணித்து வாழ்ந்த நாடும் இல்லை."

Comments