Posts

1/8:திருக்குறள் -கடவுள் வாழ்த்து

 அறவாழி அந்தணன் தாள்சேழ்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது. அறக்கடலாகிய இறவன் திருவடியை அடைந்த வரன்றி மற்றவர்களால் இன்பம் பொருள் என்னும் இருகடலை கடக்கமுடியாது.மனிதர்களின் மாயை வாழ்க்கையில் இறைவனின் திருவடியில் பணித்தோர்கள் சுற்றம் சுகம் இன்பம் உடமை ஆகியவைகளை பெறுவார்கள்.அறக்கடலாகிய கடவுளின் திருவடியை நாடதாவர்கள் சுற்றம் சுகம் இன்பம் உடமை என்னும் கடலை கடக்கமுடியாது என்பது வாழ்வின் வாழ்வியல் தத்துவமாகிறது என திருக்குறள் எடுத்துரைக்கின்றது.பாலாஜீ பாலசுப்பிரமணியம்.

1/5:திருக்குறள் -கடவுள் வாழ்த்து

Image
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்பபுரிந்தார் மாட்டு. இறைவனின் மெய்புகழை உணர்ந்தவர்க்கு அறியாமையால் வரும் நல்வினை தீவினை வந்து சேராத. மனிதர்களின் மாணிட வாழ்வில் கடவுளின் மெய்புகழை புரிந்தோர்க்கு வருகின்ற இன்பமோ துன்பமோ அவர்களை வந்து சேரமல் இறைவனின் சக்தி காத்தருளும் என்பதே பொருள் ஆகிறது.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம் Transliteration: Irulser iruvinaiyum seraa iraivan Porulser pugazhpurindhaar maattu. Direct English Translation The two types of actions born of ignorance (good and evil) will not touch those who truly understand and praise the genuine glory of God. Detailed Meaning & Explanation Literal Meaning: For those who realize the true nature and eternal glory of God, the dualities of action—both good and bad deeds resulting from ignorance—will never attach themselves to them. Expanded Concept: In human life, those who deeply comprehend the true essence of the Divine remain unaffected by the fruits of pleasure or sorrow. The ...

1/4:திருக்குறள் -கடவுள் வாழ்த்து

Image
வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார் யாண்டும் இடும்பை இல்.விருப்பு வெறுப்பற்ற கடவுளை தொழுபவர்க்கு என்றும் துன்பம் நேராது. மனிதர்களின் வாழ்வுதனில் விருப்பத்தொடும் பக்தியோடும் கடவுளை வணங்க்குவோர்க்கு வாழ்வில் என்றும் துன்பம் நேராது நொய்யற்ற வாழ்வும் குறையற்ற செல்வமும் வாழ்வை வளமாக்கும் என்பது பொருள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம்.

திருக்குறள்-கடவுள் வாழ்த்து

1/3: மலர்மிமிசை ஏகினான் மாண்டி சேர்ந்தார்  நிலமிசை நீடுவாழ் வார் ! உயிர்களின் உள்ளத்தாமரை மலரில் விற்றிருக்கும் கடவுளின் திருவடியை நினைத்திருப்பவர் இவ்வுலகில் நீண்டகாலம் வாழ்வர் ! மனிதர்களின் வாழ்வில் கடவுளின் சக்தியும் கடவுள்மீது நம்பிக்கை கொள்ளபவர்களும் இந்த உலகில் நீண்டகாலம் வாழ்வார்கள் என மனிதர்களின் ஐதிகம் கூறுவதாக திருக்குறள் எடுத்துரைக்கின்றது !  தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் . பாலாஜீ பாலசுப்பிரமணியம்

1/1:திருக்குறள்-கடவுள் வாழ்த்து

Image
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.எழுத்துக்கள் யாவும் அ என்றே அகர ஒலியை முதலாக்கொண்டுள்ளன அது போல் ஆதியாகிய கடவுள் உலக உயிர்க்கெல்லாம் முதலானவன்.உலகத்தில் எத்தனையோ மொழிகள் உண்டு அவையாவும் அ என்றே ஆரம்பிக்கின்றது அதனால்தான் அகர ஒலி என்று அழைக்கப்படுகின்றது ஆதியும் அத்தமும் சிவனே எனப்பொருள்படும்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜி பாலசுப்பிரமணியம் .