Posts

8/74:திருக்குறள்-அன்புடைமை

Image
அன்பு ஈனும் ஆர்வம் உடமை அது ஈனும் நண்பென்னும் நாடாச் சிறப்பு. பிறரிடத்தில் அன்பு செலுத்தி விருப்புடனிருக்கும் தன்மை,நட்பு என்னும் அளவு கடந்த சிறப்பைத் தரும். மற்றவரிடத்தில் அன்பு கொண்டு விருப்பத்துடன் வாழுகின்ற தன்மை உறவு என்ற அளவை கடந்து நல்ல சிறப்பை தரும் என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.திருக்குறள் புலமை பாலாஜீ பாலசுப்பிரமணியம் டென்மார்க்.

8/73:திருக்குறள்-அன்புடைமை

அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு.அன்புடன் பொருந்தி வாழ்வதே அரிய உயிர்க்கு உடலுடன் பொருந்திய தொடர்பு ஆகும்.  அன்புடன் இனைந்து வாழ்வதே உயிர்களுக்கு உள்ள வாழ்க்கை யாகும் அந்த உடலும் உயிரும் இல்லாமல் வாழ்க்கை என்பது இல்லை அதனால் உயிர் உள்ள உடலுன் அன்பு என்றும் சேர்ந்து வாழும் வாழ்வே சிறப்பென்பார் என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம் .

8/72:திருக்குறள்-அன்புடைமை

அன்பபிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு அன்பில்லாதவர்கள் அனைத்துப் பொருளையும் தாமே பிறர்க்கு தராமல் அனுபவிப்பார்கள் அன்புடையவர்கள் தம் பொருளையும் உடலையும் பிறர்க்கு தந்துதவுவர்.மனிதர்களின் வாழ்கையில் அன்பு இல்லாதவர்கள் மற்றவர்களுக்கு உதவி செய்து வாழ்க்கை நடந்தமாட்டார்கள் தங்களின் செல்வங்களை தாங்கள் மட்டுமே அனுபவித்து இந்த உலகில் வாழ்க்கை நாடத்துவார்கள் அன்புடையோர் தங்களுடைய செல்வங்களையும் உடலையும் மற்றவர்களும் தானமாக அழித்து மற்றவர்களுடைய வாழ்வில் மகிழ்ச்சியான வாழ்வை காண்பார்கள் என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம்.

8/71:திருக்குறள்-அன்புடைமை

 அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கண்நீர் பூசல் தரும்.அன்புடையாரின் துன்பத்தைக் கண்டதும் அவர் தம் கண்களிலிருந்து நீர் சிந்தி அன்பை வெளிப்படுத்திவிடுவார் எனவே அன்பிற்கு அதை பிறர் அறியாமல் அடைத்து வைக்கும் தாழ்ப்பாள் இல்லை.இந்த உலகத்தின் மனிதர்களின் வாழ்க்கையில் அன்பு உடையவர்களின் துன்பத்தைக்கண்டு மனம்வருந்ததோர் மனிதர்களில்லை எனவே அப்படி மனம் வருத்தும் ஒவ்வொரு மனிதர்களும் தங்கள் விழிகளினால் கண்ணீர் சிந்தி தங்கள் அன்பை வெளிப்படுத்துவார்  அதனால் அன்பிற்கும் பாசத்துக்கும் அதை பிறர் அறிந்து கொள்ளாமல் பாதுகாக்கும் சக்தி இல்லையென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும். பாலாஜீ பாலசுப்பிரமணியம்.

7/70:திருக்குறள்-மக்கட்பேறு

Image
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என்னோற்றான் கொல் எனுஞ் சொல். தன்னைக் கல்வியில் சிறந்தவனாக்கியத் தந்தைக்கு மகன் செய்யும் உதவி,இவன் தந்தை இவனைப் பெற என்ன தவம் செய்தானோ என்று சொல்லும்படி நடக்கவேண்டும்.பிள்ளைகள் பெற்றோருக்கு செய்யும் உதவி இந்த உலகில் நல்லொழுக்கத்தோடு சீரும் சிறப்புமாக வாழ்வை வாழ்ந்து சமுதாயத்தில் நல்லதொரு இடத்தில் தங்கள் வாழ்வை நிலைநாட்டிக் கொள்ளும் பிள்ளைகளை பெற்றதுக்கு இவர்களின் பெற்றோர் என்ன தவம் செய்தார்களோ என்று இந்த உலகம் போற்றவேண்டும் அதுவே பிள்ளைகள் பெற்றோருக்கு செய்யும் உதவியாகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம் டென்மார்க்.

7:69திருக்குறள்-மக்கட்பேறு

7/ 69:ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்  தன் மகனை அறிவொழிங்கங்களில் சிறந்தவன் என்று  சொல்லக்கேட்ட தாய் அவனை பெற்ற பொழுது மகிழ்ந்ததை விட பன்மடங்கு மகிழ்ச்சி அடைவாள் பெற்றோரின்  பிள்ளைகள் இந்த உலகில் சிறந்த  நற்பண்புடையவர்களாக வாழுகின்றார்கள் என கேள்விப்படும்போது அவர்களை பெற்று வளர்த்த காலங்களில் இருந்த மகிழ்ச்சியை விட  அதிகமான சந்தோஷமடைவார்கள் என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும் ! பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்

7.68திருக்குறள்-மக்கட்பேறு

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது தம்பிள்ளைகள் தம்மைவிட கல்வி அறிவில் சிறந்திருப்பது  தம்மைவிட உலகில் உள்ளவர்களுக்கு மகிழ்வைத்தரும். பெற்றோர்கள் தாங்கள் கல்விகற்றிருப்பதை விட தங்கள் பிள்ளைகள்  மிகவும் கல்வி கற்றுக்கொண்டாலே அவர்களுக்கு மகிழ்ச்சி தரும் அதைவிட கல்வியில் சிறப்பிருந்தால் உலக மக்கள் எல்லோருமே மகிழ்ச்சியடைவார்கள் என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.திருக்குறள் புலமை பாலாஜீ பாலசுப்பிரமணியம் டென்மார்க்.