8/71:திருக்குறள்-அன்புடைமை
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கண்நீர் பூசல் தரும்.அன்புடையாரின் துன்பத்தைக் கண்டதும் அவர் தம் கண்களிலிருந்து நீர் சிந்தி அன்பை வெளிப்படுத்திவிடுவார் எனவே அன்பிற்கு அதை பிறர் அறியாமல் அடைத்து வைக்கும் தாழ்ப்பாள் இல்லை.இந்த உலகத்தின் மனிதர்களின் வாழ்க்கையில் அன்பு உடையவர்களின் துன்பத்தைக்கண்டு மனம்வருந்ததோர் மனிதர்களில்லை எனவே அப்படி மனம் வருத்தும் ஒவ்வொரு மனிதர்களும் தங்கள் விழிகளினால் கண்ணீர் சிந்தி தங்கள் அன்பை வெளிப்படுத்துவார் அதனால் அன்பிற்கும் பாசத்துக்கும் அதை பிறர் அறிந்து கொள்ளாமல் பாதுகாக்கும் சக்தி இல்லையென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும். பாலாஜீ பாலசுப்பிரமணியம்.
Comments