Posts

9/87:திருக்குறள்-விருந்தோம்பல்

இணைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின் துணைத்துணை வேள்விப்பயன்.விருந்தோப்பல் அறத்தின் பயனை கூற இயலாது விருந்தினரின் தகுதியளவிற்கேற்றவாறு அது அமையும். விருந்தாளிகளை வரவேற்பதே தனிச்சிறப்பு அளிக்கும் விருந்தினால் வாழ்க்கையின் பயனை அளவிடமுடியாது விருதாளிகளின் உயர் நிலையை பொறுத்தே அவைகள் அமையும் என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம் வீழ்வது நாம் ஆயினும் வாழ்வது தமிழாகட்டும்.

9/86:திருக்குறள்-விருந்தோம்பல்

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத்தவர்க்கு.செல்லும் விருந்தினரை உபசரித்து மேலும் வரும் விருந்தினரை எதிர்கொண்டு உபசரிப்பவன் வானுலகில் நல் விருந்தின்னாக உபசரிக்கப்படுவான்.போகின்ற விருந்தாளிகளை நன்றாக உபசரித்து இனிமேல் வருகின்ற விருந்தாளிகளையும் ஏற்றுக்கொண்டு விருந்தளிப்பவர்களுக்கு,வானுலகிலும் சிறந்த விருந்தாளிகாளாக ஏற்று உபதரிக்கப்படுவார்கள் என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.திருக்குறள் புலமை பாலாஜீ பாலசுப்பிரமணியம் டென்மார்க்

9/85:திருக்குறள்-விருந்தோம்பல்

வித்தும் இடல் வேண்டும் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம்.விருந்தினரை உணவிட்டு உபசரித்து  மீதியை உண்பவன் நிலத்தில் விதைக்காமலே பயிர் விளையும்.வீட்டுக்கு வரும் விருந்தாளிக்கு அன்போடு அரைவனைத்து அன்மிட்டு மிகுதியாக இருக்கும் உணவை உண்பவன் வயலில் விதைக்காமலே விதை முளைத்து பயிராகி சிறந்த விளைச்சலை கொடுக்குமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.திருக்குறள் புலமை பாலாஜீ பாலசுப்பிரமணியம் டென்மார்க்

9/84:திருக்குறள்-விருந்தோம்பல்

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகடமர்ந்து நல்விருந்து ஒம்புவான் இல்.முகமலர்ந்து விருந்தினரை உபசரிப்பவனது வீட்டில் திருமகள் மனமகிழ்ந்து செல்வம் பெருக்கி வாழ்வாள்.வாழ்வில் நல்லமனத்தோடும் மலர்ந்த முகத்தோடும் விருந்தினருக்கு உபசரிப்பவர்கள் வீட்டாருக்கு அவர்களது வீட்டில் இலட்சுமி மனமகிழ்ந்து செல்வத்தைப்பெருக்கி வாழவைப்பார் என எடுத்துரைக்கின்றது குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.திருக்குறள் புலமை.பாலாஜீ  பாலசுப்பிரமணியம்

9/83:திருக்குறள்-விருந்தோம்பல்

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று.நாள்தோறும் தன்னை நாடி வரும் விருந்தினரை உபசரித்து வாழ்பவன் வாழ்க்கை வறுமையால் வருந்துவதில்லை.சமுகத்தில் மனிதர்கள் வாழுகின்ற வாழ்க்கையில் மனிதர்களுக்கு மனிதர்கள் உபச்சாரம் செய்து வாழ்பவர்களின் வாழ்வில் கஸ்ட துன்பங்கள் வந்து சேருவதில்லையென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும். பாலாஜி பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

9/82:திருக்குறள்-விருந்தோம்பல்

விருந்து பிறத்தாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டாற் பாற்றன்று. தம்மை நாடிவந்த விருந்தினர் வெளியிருக்க தான் மட்டும் உண்பது அமிழ்தேயானும் விரும்பத்தக்கதன்று.உலகத்து மக்களின் வாழ்வில் விருந்தினர்களுக்கு விருந்தோம்பல் அழிக்காது தாங்கள் மட்டும் உண்டு மகிழும் பழக்கம் அமுதாக இருப்பினும் அது விரும்பதங்கதில்லையென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும். பாலாஜி பாலசுப்பிறமணியம் . அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

9/81:திருக்குறள்-விருந்தோம்பல்

இருந்தோம்பி இல்வாழ்வ தொல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு.பொருள் சேர்த்து மனைவியிடமிருந்து  இல்வாழ்க்கை நடந்துவதெல்லாம் விருந்தினரை உபசரித்து உதவி செய்வதற்கேயாகும்.பணம் பொருள் புகழ் சேர்த்து மனையாளுடன் வாழுகின்ற இல்லற வாழ்வில் இல்லாதவர்களுக்கு பலனை எதிர்பார்க்காது உதவிவாழ்வது இல்லறவாழ்வுக்கு சிறந்தது பிறர் நமக்கு உதவி தேவைப்படும்போது சிறு உதவி புரிந்தாலும் அதை என்றும் மறக்கலாகாது நமக்கு பயன் அழிக்காத ஒன்றை மக்கள் செய்தால் அதனை அப்பவே மறந்து விடுவது வாழ்வில் சிறந்த ஒழுக்கமாகும் என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம் . வீழ்வது நாம் ஆயினும் வாழ்வது தமிழாக இருக்கவேண்டும் .