9/84:திருக்குறள்-விருந்தோம்பல்
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகடமர்ந்து நல்விருந்து ஒம்புவான் இல்.முகமலர்ந்து விருந்தினரை உபசரிப்பவனது வீட்டில் திருமகள் மனமகிழ்ந்து செல்வம் பெருக்கி வாழ்வாள்.வாழ்வில் நல்லமனத்தோடும் மலர்ந்த முகத்தோடும் விருந்தினருக்கு உபசரிப்பவர்கள் வீட்டாருக்கு அவர்களது வீட்டில் இலட்சுமி மனமகிழ்ந்து செல்வத்தைப்பெருக்கி வாழவைப்பார் என எடுத்துரைக்கின்றது குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.திருக்குறள் புலமை.பாலாஜீ பாலசுப்பிரமணியம்
Comments