Posts

11/110:திருக்குறள்-செய்நன்றி அறிதல்

எந்நன்றி கொன்றார்க்கு உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்ற கொன்ற மகற்க எவ்வகைப்பட்ட நன்மையை அழித்தவர்க்கும் அப்பாவத்திலிருந்து விடுபடவழியுண்டு தனக்கு செய்த நன்றியை மறந்தவனுக்கு அதிலிருந்து விடுபடவழியில்லை எப்படிப்பட்ட நன்மைகளை புரிந்தாவர்களுக்கும் பாவங்களில் இருந்து விடுபட்டுக்கொள்ள நல்ல வழிகள்உண்டு ஆனால் செய் நன்றி மறந்தவர்களுக்கு அந்த பாவத்திலிருந்து விடுபட வேறு வழியில்லை என எடுத்துரைக்கின்றது திருக்குறள். திருக்குறள் புலமை பாலாஜீ பாலசுப்பிரமணியம் டென்மார்க் உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

11/109:திருக்குறள்-செய்நன்றி அறிதல்

கொன்றன்ன இன்னா செயினும் அவர் செய்த ஒன்று நன்று உள்ளக்கெடும்.தனக்கு நன்மை செய்தவர் கொல்வது போன்ற தீமையை செய்தாலும் அந்த நன்மையை நினைக்கவே தீமைமறையும்.மனிதர்களே உங்களுக்கு யாராவது உதவி புரிந்திருந்தால் அவர்கள் எங்களின் உயிரை எடுப்பதுபோல் கோபம் கொண்டு தீமைகள் புரிந்தாலும் அவர்கள் அன்று செய்த உதவியை நினைத்து பாருங்கள் அவர்கள் செய்யவந்த தீமைகள் மறைந்து மனதிலிருந்து மறைந்துபோகும் என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.திருக்குறள் புலமை பாலாஜீ பாலசுப்பிரமணியம் டென்மார்க்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

11/108:திருக்குறள்-செய்நன்றி அறிதல்

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று . ஒருவன் செய்த உதவியை மறப்பது நல்லதில்லை செய்ததீமையை உடனே மறப்பது நலம்.மனிதர்களின் வாழ்வில் மனிதர்கள் மனமிரங்கி உதவிகளை புரிந்திருக்கக்கூடும் அந்த உதவிகளை மறப்பது செய்நன்றி மறப்பது என்பதாகும் அதேநேரம் அதே மனிதர்கள் தீமைகளையும் புரிந்திருக்கலாம் அத்தீமைகளை அன்றே மறந்து அவர்கள் செய்த நன்மைகளையும் உதவிகளையும் கருத்தில் கொள்வதே நன்மையென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும் .

11/107:திருக்குறள்-செய்நன்றி அறிதல்

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் விழுமந்துடைத்தவர் நட்பு . நல்லவர்கள் தங்கள் துன்பத்தைத் துடைத்தவர் நட்பினை தான் எடுக்கும் எழுபிறவியிலும் நினைத்து வாழ்த்துவர்.சிறந்த மனிதர்கள் தங்களின் துன்ப துயரங்களை துடைத்தவர்களின் உறவினை தாங்கள் எடுக்கும் ஏழு ஏழு பிறவியிலும் நினைத்து வாழ்த்திக்கொண்டேயிருப்பார்கள் என எடுத்துரைக்கின்றது தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.திருக்குறள் புலமை பாலாஜீ பாலசுப்பிரமணியம்

11/106:திருக்குறள்-செய்நன்றி அறிதல்

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க துன்பத்துள் துப்பாயார் நட்பு.தூயவர் நட்பினை மறவாதிருக்க வேண்டும் துன்பம் வரும் காலத்து தனக்கு உதவியாய் இருந்தவர்களின் நட்பைகைவிடாது இருக்கவேண்டும்.நல்லவர்களின் உறவை ஒருபோதும் மறக்க கூடாது என்று நினைவில் கொண்டிருக்கவேண்டும்  துன்பங்கள் வரும் நேரங்களில் தங்களுக்கு ஒருதுணையாக இருந்தவர்களின் உறவை என்றும் கைவிடக்கூடாது அவர்களின் உறவை வளர்த்து கொள்வதே மேன்மை தருமென எடுத்துரைக்கின்றது தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.திருக்குறள் புலமை பாலாஜீ பாலசுப்பிரமணியம்.

11/105:திருக்குறள்-செய்நன்றி அறிதல்

உதவி வரைத்தன்று உதவி உதவி செய்யப்பட்டார் சால்வின் வரைத்து . ஒருவர் செய்யும் உதவி முன்பு தான் செய்த உதவியின் அளவாகக் கருதக்கூடாது செய்யப்பட்டவர்களின் பண்பினை அளவாக கருதவேண்டும்.மனிதவாழ்வில் உதவி தேவைப்பட்ட நேரத்தில் உதவி செய்தவர்களை அவர்கள் செய்த உதவின் அளவைகொண்டு மறுஉதவி செய்யக்கூடாது உங்களுக்கு உதவி செய்தவர்களின் வாழ்கை பண்பையும் நல்ல குணத்தையும் உங்கள் மீது கொண்ட அன்பையும் மனதில் கொண்டு  அதற்கு ஏற்றவாறு வாழ்வில் நடந்து கொள்ளவேண்டுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.எழுதுகோல் முனையில் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.

11/104:திருக்குறள்-செய்நன்றி அறிதல்

தினைத்துணை நன்றி செய்யினும் பனைத்துணையாக் கொள்வார் பயன் தெரிவார்.தனக்கு ஒருவன் தினையளவு நன்மை செய்தாலும் அதன் பயனறிந்தோர்  பெரிதாக கருதுவர்.மனிதர்களே நீங்கள் சிறிய உதவியை யாரிடமாவது பெற்றிருந்தாலும் அந்த உதவி உங்களுக்கு சரியான நேரத்தில் தக்க உதவியை பெற்றுத்தந்திருந்தால் அதன் பயனறிந்து அதை பெரிதாக கருதவேண்டும் என்றும் நன்றி மறவாது வாழ்ந்து காட்டவேண்டும் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.