உதவி வரைத்தன்று உதவி உதவி செய்யப்பட்டார் சால்வின் வரைத்து . ஒருவர் செய்யும் உதவி முன்பு தான் செய்த உதவியின் அளவாகக் கருதக்கூடாது செய்யப்பட்டவர்களின் பண்பினை அளவாக கருதவேண்டும்.மனிதவாழ்வில் உதவி தேவைப்பட்ட நேரத்தில் உதவி செய்தவர்களை அவர்கள் செய்த உதவின் அளவைகொண்டு மறுஉதவி செய்யக்கூடாது உங்களுக்கு உதவி செய்தவர்களின் வாழ்கை பண்பையும் நல்ல குணத்தையும் உங்கள் மீது கொண்ட அன்பையும் மனதில் கொண்டு அதற்கு ஏற்றவாறு வாழ்வில் நடந்து கொள்ளவேண்டுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.எழுதுகோல் முனையில் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.
Comments