Posts

22/220:திருக்குறள்-ஒப்புரவறிதல்

ஒப்பரவினால் வரும் கேடெனின் அஃதொருவன் விற்றுக்கோள் தக்கதுடைத்து. பிறர்க்கு உதவி செய்வதால் தீமை உண்டாகுமானால் அதனை தன்னை விற்றாவது வாங்கும் தகுதி படைத்தது அத் தீமை பிறருக்கு உதவி புரிவதால் செல்வங்கள் எல்லாம் இல்லாமல் போய் ஏழ்மை உண்டாகும் என்றால் அந்த இழப்பை தங்களை கொடுத்தாவது பெற்றுக்கொள்ளவேண்டுமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீபாலசுப்பிரமணியம். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

22/219:திருக்குறள்-ஒப்புரவறிதல்

நயனுடையான் நல் கூர்ந்தானாதல் செயும் நீரசெய்யாது   அமைகலா வாறு.உதவிசெய்யும் நற்குணமுடையவன் பிறர்க்கு உதவ இயலாமையையே வறுமை எனக்கூறுவான் உதவிகளை புரியவேண்டும் என்ற நல்லெண்ணமுடையவர்கள் பிறருக்கு உதவ முடியாததையே ஏழ்மை எனச் சொல்லுவார் தங்களால் மற்றவர்களுக்கு உதவ முடியவில்லை என்றே கவலையும் அடைவார்கள் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும்  பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ் .

22/218:திருக்குறள்-ஒப்புரவறிதல்

இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் கடனறி காட்சியவர்.கடமையறிந்த நல்லோர் தன் செல்வம் வற்றிய காலத்திலும் பிறர்க்கு உதவிசெய்வார். வாழ்வியல் சிந்தனையறிந்த நல்லவர்களின் செல்வங்கள் வாழ்வில் குறைந்து போன நேரத்திலும் பிறருக்கு உதவிகளை செய்தே வாழவிரும்புவார்கள் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ் .

22/217:திருக்குறள்-ஒப்புரவறிதல்

மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் பெருந்தகை யான்கண் படின். உதவி செய்யும் பெருமை படைத்தவனிடம் உள்ள செல்வம் நோய் தீர்க்கும் மருந்து மரம் போல் அனைவருக்கும் பயன்படும் வாழ்வினில் உதவிகளை புரிய வேண்டுமென்ற மனப்பான்மை கொண்ட மனிதர்களிடம் இருக்கும் செல்வங்கள் நோயை தீர்க்ககூடிய மருந்துகளை கொடுக்கூடிய மரங்களை போல பயன் தருமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

22/216:திருக்குறள்-ஒப்புரவறிதல்

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் பெருந்தகை நானுடை யான்கண் படின்.பிறருக்கு உதவும் உள்ளம் கொண்டவர் வசம் செல்வம் செருமானால் அது ஊர் நடுவே பழுத்துள்ள பழமரம் போன்றதாகும். மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர்களிடம் செல்வங்கள் சேருமானால் அது ஊருக்கு நடுவில் நின்று கொண்டிருந்து ஊராருக்காக தன்னில் பழுதுள்ள பழங்களை வழங்கும் பழமரம் போன்றதாகுமெ எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

22/215:திருக்குறள்-ஒப்புரவறிதல்

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறிவாளன் திரு.உலக நலம் கருதும் அறிஞனது செல்வம், ஊரில் உள்ள பொது குளம் போல் பலருக்கு பயன்படும்.உலகில் உள்ள சமுதாயசித்தனையுடையவர்களின் செல்வம் இந்த உலகில் உள்ள கடல் போல் அனைவருக்கும் பயன்படுமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ் . 

22/214:திருக்குறள்-ஒப்புரவறிதல்

ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையாள் செத்தாருள் வைக்கப்படும்.உலக ஒத்த நலத்தைச் செய்து வாழ்பவனே  உயிருடன் வாழ்பவன் மற்றவன் இறந்தவருள் ஒருவனாகக் கருதப்படுவான் . உலகத்தோடு ஒன்று பட்ட நலன்களை புரிந்து வாழ்பவர்களே உயிருடன் வாழ்வதாக கருதப்படுவார்கள் எனையோர் இறந்துபோனவர்களாகவே சமுதாயத்தில் கருதப்படுவார்களென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.