22/214:திருக்குறள்-ஒப்புரவறிதல்

ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையாள் செத்தாருள் வைக்கப்படும்.உலக ஒத்த நலத்தைச் செய்து வாழ்பவனே  உயிருடன் வாழ்பவன் மற்றவன் இறந்தவருள் ஒருவனாகக் கருதப்படுவான் . உலகத்தோடு ஒன்று பட்ட நலன்களை புரிந்து வாழ்பவர்களே உயிருடன் வாழ்வதாக கருதப்படுவார்கள் எனையோர் இறந்துபோனவர்களாகவே சமுதாயத்தில் கருதப்படுவார்களென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

Comments