Posts

30/296:திருக்குறள்-வாய்மை

பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை எல்லா அறமும் தரும்.பொய் பேசாதிருப்பது போன்ற புகழ் வேறில்லை அது அவன் வருந்தாமல் இருக்க எல்லா நன்மைகளையும் தரும். பொய்மையில்லாமல் வாழ்வதே வாழ்வுக்கு சிறப்பு சமுதாயத்தில் சிறந்த அந்தஸ்து கிடைக்கும் பொய்மையாய் வாழ்வாதால் பேரும் புகழும் கெட்டுப்போகும் ஏமாற்றுகரார்கள் என்ற பழியே சமுதாயத்தில் நிலைத்திருக்கும் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

30/295:திருக்குறள்-வாய்மை

மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு தானஞ்செய் வாரின் தலை.அறம் தவமும் செய்வதைக் காட்டிலும் உள்ளமறிந்து உண்மை பேசுதல் உயர்ந்ததாகும்.மனிதர்களே உங்கள் வாழ்வில் உங்கள்  இதயதறிந்த உண்மை பேசுதல் வாழ்வில் சிறந்தது அதைவிட வாழ்க்கையில் தானம் தர்மம் தவம் என எதை நீங்கள் செய்தாலும் அவற்றில் எப்பலனுமில்லை அதனால் உள்ளத்தால் உண்மையை பேசி உத்தமர்களாக வாழுங்கள் என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ். 

30/294:திருக்குறள்- வாய்மை

உள்ளத்தால் பொய்யா தெழுகின் உலகத்தார் உள்ளத்துளெல்லாம் உளன்.மனதில் பொய்யை நினைக்காமல் நடப்பவன் உலகத்தார் மனதில் எல்லாம் நிலைத்திருப்பான்.வாழ்கையில் இதயங்களில் பொய்மையின்றி நேர்மையாக வாழும் மனிதர்கள் சமுதாயத்தார்களின் இதயங்களில் என்றென்றும் நிலைத்து வாழ்வார்களென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும்  பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு  திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு . 

30/293:திருக்குறள்-வாய்மை

தன்னெஞ் சறிவது பொய்யற்க் பொய்ப்பின் தன்னெஞ்சே தன்னைச் சுடும்.ஒருவன் பொய்யென்று அறிந்த ஒன்றை மறைப்பானாயின் அவன் நெஞ்சே அவனை வருத்தும்.இந்த உலகின் மனிதர்கள் வாழ்வில் மெய் உரைப்பதும் பொய் உரைப்பதும் வாழ்க்கையின் வழக்கத்தில் உள்ளது.மனிதர்கள் தங்கள் வாழ்வில் பொய்தான் உரைக்கின்றோம் என்றே தெரிந்தும் பொய் உரைத்தால் அவர்கள் மனதை என்றும் அது வருத்தி கொண்டே இருக்கும் அவர்கள் அதில் இருந்து விடுபடமுடியாது என எடுத்துரைக்கின்றது குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் . பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

30/292:திருக்குறள்-வாய்மை

பொய்ம்மையும் வாய்மையிடத்த புரை தீர்த்த  நன்மை பயக்கும் எனின்.பொய் கூறுவதால் தூய நன்மை உண்டாகுமானல் அப்பொய்யும் மெய்யெனக் கொள்வது நன்மை.மனிதர்கள் வாழ்வினில் பொய் சொல்லக்கூடாது என்பது வாழ்க்கையின் நியதி ஆனால் சொல்லப்போகும் பொய்மையால் நல்விளைவுகள் நடக்குமாயின் அந்த பொய்மையே மெய்மையாக ஏற்றுக்கொள்ளப்படும் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

30/291:திருக்குறள்- வாய்மை

வாய்மை எனப்படுவது யாதனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்.வாய்மை எனப் போற்றப்படும்வது எவரும் எந்த உயிருக்கும் சிறிதும்  தீங்கில்லாத சொற்களைக் கூறுதல்.இந்த உலக மக்களின் வாழ்க்கையில் வாய்மொழியால் மற்றவர்கள் எவரும் மனதாலும் உடலாலும் உயிரின் உணர்வாலும் புண்படாத வண்ணம் சிறந்த வாய்மொழிகளை தருவது நல்ல மனிதர்களுக்கான தனிச்சிறப்பு தருமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம் அழிவது  நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும். 

29/290:திருக்குறள்-கள்ளாமை

கள்வார்க்குத் தள்ளும் உயிர் நிலை கள்ளார்க்குத் தள்ளாது புத்தேளுலகு.களவு செய்பவர் விரைவில் அழிந்து இறப்பார் களவு செய்யாதவர் இறந்தும் வானுலகம் எய்துவர்.தீய செயல்களை செய்து வாழுபவர்களின் உயிர் எப்போது வேண்டுமானாலும் இறந்து போகலாம் நற்செயல்களை புரிந்து வாழுகின்றவர்களது உயிர் பிரிந்தாலும் அவர்கள் வானுலகை சென்றடையும் தகுதியை பெற்றுக்கொள்வார்கள் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.