Posts

30/300:திருக்குறள்-வாய்மை

யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற.யாம் உண்மை என்று அறிந்தவற்றுள் உண்மையைக் காட்டிலும் சிறந்தது வேறில்லை. மனிதர்கள் அறிந்தவற்றில் சிறந்தவை என்றால் அது உண்மைதான் உண்மையே பேசி உத்தமர்களாக வாழ்வினை வாழ்வதை விட சிறந்ததாக கூறுவதற்கு இந்த உலகில் எதுவுமில்லை என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும்  பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.  

30/299:திருக்குறள்-வாய்மை

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்ய விளக்கே விளக்கு.புற இருளை போக்கும் விளக்குகளெல்லாம் விளக்கல்ல மன இருளான பொய்யை விலக்குவதே விளக்கு எனப்படும்.வெளியில் ஒளியற்ற  நிலையை போக்கி வெளிச்சத்தை தரும் தீபங்கள் எல்லாம் சிறந்த தீபங்கள் அல்ல குடிமக்களின் மன இருளை அகற்ற  பொய் சொல்லாது உண்மையை எடுத்துக்கூறும் விளக்கமே தலை சிறந்த தீபமாகும் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு  திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு . 

30/298:திருக்குறள்-வாய்மை

புறந்தூய்மை நீரான்  அமையும் அகந்தூய்மை வாய்மையான் காணப்படும்.உடல் தூய்மை நீராடுவதால் ஏற்படும் ஆனால் உள்ளத்தூய்மை உண்மை பேசுவதால் அமையும்.மனித வாழ்க்கையில் உங்கள் உடல்களை களுவுவதால் உங்கள் உடல்கள் தூய்மை பெறலாம் ஆனால் அதே மனிதர்கள் உண்மை பேசினால் மட்டுமே மனிதர்களின் உள்ளங்கள் தூய்மை அடையும் உண்மை பேசி உத்தமர்களாக வாழ்வதே மனிதவாழ்வின் சிறப்பாகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

30/297:திருக்குறள்-வாய்மை

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று.பொய் பேசாமை என்னும் நல்வழியை என்றும் கடைப்பிடிப்பவனுக்கு அதைவிட அறம் செய்வதற்கு வேறில்லை.மனிதர்கள் பொய் பேசாமல் வாழ்க்கையை அற நெறிகளின் படி வாழ்ந்து வந்தாலே மனதில் தெய்வம் வீற்றிருக்கும் அதன் பின்பு தேவாலயங்களுக்கு சென்று வழிபட்டு வணக்கவேண்டிய அவசியமுமில்லை அறச்செயல்கள் செய்யத்தேவையுமில்லை என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

30/296:திருக்குறள்-வாய்மை

பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை எல்லா அறமும் தரும்.பொய் பேசாதிருப்பது போன்ற புகழ் வேறில்லை அது அவன் வருந்தாமல் இருக்க எல்லா நன்மைகளையும் தரும். பொய்மையில்லாமல் வாழ்வதே வாழ்வுக்கு சிறப்பு சமுதாயத்தில் சிறந்த அந்தஸ்து கிடைக்கும் பொய்மையாய் வாழ்வாதால் பேரும் புகழும் கெட்டுப்போகும் ஏமாற்றுகரார்கள் என்ற பழியே சமுதாயத்தில் நிலைத்திருக்கும் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

30/295:திருக்குறள்-வாய்மை

மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு தானஞ்செய் வாரின் தலை.அறம் தவமும் செய்வதைக் காட்டிலும் உள்ளமறிந்து உண்மை பேசுதல் உயர்ந்ததாகும்.மனிதர்களே உங்கள் வாழ்வில் உங்கள்  இதயதறிந்த உண்மை பேசுதல் வாழ்வில் சிறந்தது அதைவிட வாழ்க்கையில் தானம் தர்மம் தவம் என எதை நீங்கள் செய்தாலும் அவற்றில் எப்பலனுமில்லை அதனால் உள்ளத்தால் உண்மையை பேசி உத்தமர்களாக வாழுங்கள் என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ். 

30/294:திருக்குறள்- வாய்மை

உள்ளத்தால் பொய்யா தெழுகின் உலகத்தார் உள்ளத்துளெல்லாம் உளன்.மனதில் பொய்யை நினைக்காமல் நடப்பவன் உலகத்தார் மனதில் எல்லாம் நிலைத்திருப்பான்.வாழ்கையில் இதயங்களில் பொய்மையின்றி நேர்மையாக வாழும் மனிதர்கள் சமுதாயத்தார்களின் இதயங்களில் என்றென்றும் நிலைத்து வாழ்வார்களென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும்  பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு  திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .