Posts

31/306:திருக்குறள் -வெகுளாமை

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் ஏமப் புணையைச் சுடம்.சினமென்னும் தீ அதைக்கொண்டவனையும் அதற்கு துணையாகிய சினத்தையும் அழிக்கும்.மனிதர்கள்  மேற்கொள்ளுகின்ற கோபம் என்பது சேர்ந்தவர்களையே எரித்துவிடும் தீ அதை மேற்கொள்ளுகின்றவர்களையே என்றும் சென்றடையும் அதற்கு சார்பாகியவர்களின் கோபத்தையும் நெருப்பாக சுட்டு அழித்துவிடுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.தாய்மொழியை போற்றீ வீழ்ந்த நாடுமில்லை தாய்மொழியை புறக்கணித்து வாழ்ந்த நாடுமில்லை.                      

31/305:திருக்குறள்-வெகுளாமை

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் தன்னேயே கொல்லும் சினம்.ஒருவன் தான் வாழவேண்டின் சினத்தை ஒழிக்க வேண்டும் இல்லையேல் சினம் அவனையே அழித்துவிடும்.மனிதர்களின் வாழ்வுதனில் சினம் கொள்வது வளமையானது அச்சினம் அதிகமாக இருத்தல் கூடாது கோபம் கொள்ளும் மனிதர்கள் தாங்கள் நின்மதியாக வாழவேண்டும் என்றால் கோபங்களை அடக்கிக்கொள்ள வேண்டும் அடக்கவிட்டால் அந்த கோபமானது எதிரியாக மாறி மனிதர்களின் வாழ்வையே அழித்து விடும் என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு . 

31/304:திருக்குறள்-வெகுளாமை

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் பகையும் உளவோ பிற.முகமலர்ச்சியையும் அகநின்மதியையும் கெடுக்கும் சினத்தை விட ஒருவனுக்கு பகை வேறில்லை.சிரித்தமுகமில்லாத முகமும் மன நின்மதியை ஏற்படுத்தாத கோபமான சிந்தனைகளும் மனிதர்களுக்கு வாழ்வினில் விரோதத்தை வளர்க்கும் நின்மதியும் அழிந்து போகும் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.

31/303:திருக்குறள்-வெகுளாமை

Image
மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய பிறத்தல் அதனான் வரும்.எவர் மீதும் சினம்கொள்ளாதிருக்கவேண்டும் அச்சினத்தால் தீமைகள் பல வந்து சேரும்.மனிதர்களே உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கோபம் கொள்ளாதிருப்பது உங்கள் வாழ்விற்கான சிறப்பு நீங்கள் ஒரு உயர் பதவி அல்லது அரசியலில் இருந்தால் உங்களின் சினந்தால் நாட்டு மக்கள் துன்பத்துக்கு ஆளவார்கள் நாட்டின் இனம் மொழி காலச்சாரம் கல்வி பொருளாதாரம் கெளரமான மக்களின் வாழ்வியல் அழித்து சமுதாயத்தில் பல விதமான சீர்கேட்டை உருவாக்கும் உங்கள் இச் சினந்தால் பல தீமைகள் வந்து சேருமென எடுத்துக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம் 

31/302:திருக்குறள்-வெகுளாமை

செல்லா இடத்துச் சீனந்தீது செல்லிடத்தும் இல் அதனின் தீய பிற.சினம் வலியவர் மீது  கொண்டால் தனக்கே தீமை என்றும் தன்னைவிட மெலியவர் மிது கொண்டால் அதைவிட தீமை பெரியதில்லை என அறிந்து நடக்க வேண்டும்.மனிதர்கள் வாழ்வில் சினம் என்பது ஒரு பாகம் . நாம் ஒருவர் மீது கோபம் கொள்ளும்போது அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை அறிந்தே சினம் கொள்ளவேண்டும். நாம் சினம் கொள்பவர்கள் எங்களை விட பல சாலியாக இருந்தால் எமக்கே தீமையாக முடியும் .எங்களை விட பலம் இல்லாவர்களிடம் எங்கள் வீரத்தை காட்டுவதும் அதை விட தீமை ஏதுமில்லை.நாங்கள் சினம் கொள்ளும் எதிரிகள் எந்த நிலையில் இருக்கின்றார்கள் என அறிந்தே நடக்கவேண்டுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் எழுதுகோல் முனையில். பாலாஜீ பாலசுப்பிரமணியம்.

31/301:திருக்குறள்-வெகுளாமை

செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக் காக்கின்என் காவாக்கால் என். ஒருவன் கோபம் பலிக்கக் கூடிய இடத்தில் தன் கோபத்தை அடக்கவேண்டும் பலிக்காத இடத்தில் அடக்குவதும் அடக்காமிருப்பதும் ஒன்றே.மனிதர்களே நீங்கள் கோபம் கொள்ளும் போது அந்த கோபம் நீங்கள் கோபம்கொள்ளுகின்ற இடத்தில் சாத்தியப்படுமா என தெரிந்து கொண்டே கோபப்படவேண்டும் உங்கள் கோபம் சாத்தியபடாதா இடத்தில் நீங்கள் உங்கள் கோபத்தை அடங்கினாலும் ஒன்றுதான் அடக்கவிட்டாலும் ஒன்றுதான்.அதலால் நீங்கள் எக்காரியம் செய்யினும் அக்காரியத்தை செய்யமுன் ஒரு தடவைக்கு பல தடவைகள்  சிந்தித்தே செயல்படவேண்டும் என எடுத்துரைக்கின்றது குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.எழுதுகோல் முனையில் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ். 

30/300:திருக்குறள்-வாய்மை

யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற.யாம் உண்மை என்று அறிந்தவற்றுள் உண்மையைக் காட்டிலும் சிறந்தது வேறில்லை. மனிதர்கள் அறிந்தவற்றில் சிறந்தவை என்றால் அது உண்மைதான் உண்மையே பேசி உத்தமர்களாக வாழ்வினை வாழ்வதை விட சிறந்ததாக கூறுவதற்கு இந்த உலகில் எதுவுமில்லை என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும்  பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.